கொரோனா பரிசோதனைகளின் சதவீதத்தை அதிகரிக்க மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் பரிந்துரை


கொரோனா பரிசோதனைகளின் சதவீதத்தை அதிகரிக்க மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் பரிந்துரை
x
தினத்தந்தி 7 April 2021 3:46 AM GMT (Updated: 7 April 2021 3:46 AM GMT)

கொரோனா பரிசோதனைகளின் சதவீதத்தை அதிகரிக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் பரிந்துரைத்துள்ளார்.

புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த ஆண்டு வந்த கொரோனாவின் முதல் அலையைக் காட்டிலும், தற்போது வந்துள்ள இரண்டாவது அலையின் தாக்கம் மிக அதிக அளவில் இருக்கிறது. இதன்மூலம் கொரோனாவின் மோசமான பாதிப்புக்கு ஆளான நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, பிரேசிலைத் தொடர்ந்து இந்தியா 3-வது இடத்தில் நீடிக்கிறது. 

இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பரவல் அதிகம் உள்ள முதல் 10 மாவட்டங்களில், ஏழு மாவட்டங்கள் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்தவை என்றும், மற்ற மூன்றும் கர்நாடகா, சத்தீஸ்கர் மற்றும் டெல்லி மாநிலங்களைச் சேர்ந்தவை என்றும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார். 

கொரோனா தடுப்பூசி பெறுவதற்கு தகுதி பெற்றவர்கள், தடுப்பூசியை எடுத்து கொள்ள என்று அவர் அறிவுறுத்தி உள்ளார். மேலும் சத்தீஸ்கரில் நோய் பரவல் அதிகரித்து வருவதாக தெரிவித்த ராஜேஷ் பூஷண், ஆர்டி பி.சி.ஆர் சோதனைகளின் சதவீதத்தை அதிகரிக்க மாநில அரசுகளுக்கு பரிந்துரைத்துள்ளார். 

Next Story