உலக சுகாதார தினம்; நாட்டுமக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்
உலக சுகாதார தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுடெல்லி,
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7 ஆம் தேதி உலக சுகாதார நிறுவனம் கடைபிடிக்கப்படுகிறது. உலக சுகாதார தினத்தையொட்டி பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: - உலக சுகாதர தினத்தில், கொரோனா தடுப்பு விதிகளான மாஸ்க் அணிதல், அடிக்கடி கைகளை கழுவதல் உள்ளிட்ட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும்.
அதே நேரத்தில் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதிலும் உடல் தகுதியுடன் இருப்பதற்கும் சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். நமது உலகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க இரவு பகலாக பாடுபடுவர்களுக்கு நாம் நன்றியையும் ஊக்கத்தையும் மீண்டும் உறுதிப்படுத்தும் நாள் இதுவாகும்” எனப்பதிவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story