செஷல்ஸ் நாட்டில் இந்திய திட்டங்களை மோடி இன்று தொடங்கி வைக்கிறார்
இந்திய பெருங்கடலில் உள்ள 115 தீவுகள் அடங்கிய நாடாக செஷல்ஸ் உள்ளது.
புதுடெல்லி,
இந்திய பெருங்கடலில் உள்ள 115 தீவுகள் அடங்கிய நாடாக செஷல்ஸ் உள்ளது. அந்த நாட்டில், இந்திய நிதிஉதவியுடன் கூடிய திட்டங்கள் தொடக்க விழா இன்று நடைபெறுகிறது. பிரதமர் மோடியும், செஷல்ஸ் நாட்டு ஜனாதிபதி வாவல் ராம்கலவனும் காணொலி காட்சி மூலம் இதில் பங்கேற்று திட்டங்களை தொடங்கி வைக்கிறார்கள்.
செஷல்ஸ் நாட்டில் புதிய மாஜிஸ்திரேட் கோர்ட்டு கட்டிடம் தொடங்கி வைக்கப்படுகிறது. ஒரு விரைவு ரோந்து கப்பல், செஷல்ஸ் கடலோர காவல்படைக்கு பரிசாக வழங்கப்படுகிறது.
1 மெகாவாட் திறன் கொண்ட சூரியசக்தி திட்டம் ஒப்படைக்கப்படுகிறது.
Related Tags :
Next Story