கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் - சிக்கமகளூரு போக்குவரத்து ஊழியர்கள் பேட்டி
சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் என சிக்கமகளூரு போக்குவரத்து ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
சிக்கமகளூரு,
கர்நாடக மாநில அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள், சம்பள உயர்வு உள்ளிட்ட நிலுவையில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஏப்ரல் 7-ந் தேதி(நேற்று) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையொட்டி பெங்களூரு, மைசூரு, சிக்கமகளூரு, மண்டியா, ஹாவேரி, கதக், பெலகாவி, கலபுரகி, தட்சிணகன்னடா, உடுப்பி உள்பட அனைத்து மாவட்டங்களிலும் பெரும்பாலான ஊழியர்கள் பணிக்கு ஆஜராகவில்லை. இதனால் அரசு பஸ்களின் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது. இதனால் தனியார் பஸ்கள், பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதி வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் சிக்கமகளூரு மாவட்டத்தில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போக்குவரத்து ஊழியர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்ததாவது:-
“வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் போக்குவரத்து ஊழியர்கள் மீது எஸ்மா சட்டம் பாயும் என்று கூறி எங்களை பயமுறுத்துவதை அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும். அதற்கெல்லாம் பயந்து நாங்கள் போராட்டத்தை கைவிட மாட்டோம்.
சம்பள உயர்வு உள்பட எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும். கடந்த ேவலை நிறுத்தத்தின் போது போக்குவரத்து துைற மந்திரி லட்சுமண் சவதி கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. ஆதலால் முதல்-மந்திரி எடியூரப்பா எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வரவேண்டும்.”
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story