கர்நாடகத்தில் புதிதாக 6,570 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
பெங்களூரு:
கர்நாடக அரசின் சுகாதாரத்துறை நேற்றைய பாதிப்பு குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
மருத்துவமனைகளில் சிகிச்சை
கர்நாடகத்தில் நேற்று 1 லட்சத்து 8 ஆயிரத்து 757 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 6,570 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 10 லட்சத்து 40 ஆயிரத்து 130 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு மேலும் 36 பேர் உயிரிழந்தனர். இதனால் மாநிலத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 767 ஆக உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் 2,393 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் மாநிலத்தில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 73 ஆயிரத்து 949 ஆக அதிகரித்துள்ளது. 357 பேர் தீவிர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 53 ஆயிரத்து 395 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவுக்கு பெங்களூரு நகரில் 22 பேர், கலபுரகியில் 3 பேர், பெங்களூரு புறநகர், மண்டியாவில் தலா 2 பேர், பெலகாவி, பீதர், தார்வார், கோலார், மைசூரு, துமகூரு, விஜயாப்புராவில் தலா ஒருவர் என மொத்தம் 36 பேர் உயிரிழந்தனர்.
இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கர்நாடகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் வைரஸ் தொற்றுக்கு ஒரே நாளில் 36 பேர் உயிரிழந்தனர்.