தேசிய செய்திகள்

தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையில் பினராயி விஜயனுக்கு கொரோனா + "||" + After being vaccinated Corona to Binarayi Vijayan

தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையில் பினராயி விஜயனுக்கு கொரோனா

தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையில்  பினராயி விஜயனுக்கு கொரோனா
தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையில், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,

நாட்டில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாவது அலையினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் ஒன்றாக கேரளா விளங்குகிறது.

அங்கு நேற்று முன்தினம் 63 ஆயிரத்து 901 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில், நேற்று 4,353 பேருக்கு கொரோனா வைரஸ் பெருந்தொற்று உறுதியானது. கொரோனா பாதிப்பு விகிதம் 6.81 சதவீதமாக உள்ளது.

33 ஆயிரத்து 621 பேர் தற்போது அங்கு சிகிச்சையில் உள்ளனர்.

அந்த மாநிலத்தின் முதல்-மந்திரி பினராயி விஜயனையும் (வயது 75) கொரோனா தொற்று விடவில்லை. அவருக்கு கொரோனா பாதித்து இருப்பது நேற்று உறுதியானது.

அவரது மகளுக்கும், மருமகனுக்கும் நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது நினைவுகூரத்தக்கது.

பினராயி விஜயனுக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் ஏதுமில்லை. அவர் கடந்த மாதம் 3-ந்தேதி கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் எடுத்துக்கொண்டார். இரண்டாவது டோஸ் இன்னும் எடுத்துக்கொள்ளாத நிலையில் கொரோனா தொற்று பாதித்துள்ளது. தற்போது கண்ணூர் இல்லத்தில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ள அவர் கோழிக்கோடு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படுகிறார் என கேரளாவில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

இதையொட்டி டுவிட்டரில் நேற்று பதிவிட்ட பினராயி விஜயன், “எனக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை எடுத்துக்கொள்ள போகிறேன். என்னோடு நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள், சுய கண்காணிப்பில் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என கூறி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவில் இடதுசாரி கூட்டணி வரலாற்று வெற்றி பெறும்: பினராயி விஜயன் நம்பிக்கை
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயகக் கூட்டணி வரலாற்று வெற்றி பெறும் என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.
2. தேர்தல் விதிகளுக்கு எதிராக அமலாக்கத்துறை செயல்படுகிறது: பினராயி விஜயன் குற்றச்சாட்டு
தேர்தல் விதிகளுக்கு எதிராக அமலாக்கத்துறை செயல்படுவதாக பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்.
3. கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு கர்நாடகா கட்டுப்பாடு: பிரதமருக்கு பினராயி விஜயன் கடிதம்
கேரள மக்கள் கர்நாடகத்திற்குள் நுழைய அனுமதி மறுப்பது தொடர்பாக பிரதமருக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.
4. கேரள கிறிஸ்தவ திருச்சபையில் 2 குழுக்களின் மோதலை தீர்க்க மோடி நடவடிக்கை; பினராயி விஜயன் வரவேற்பு
டெல்லியில் பிரதமர் மோடி, ஆர்த்தோடக்ஸ் பிரிவினருடன் கடந்த திங்கட்கிழமையும், யாக்கோபிய பிரிவினருடன் நேற்றும் பேச்சுவார்த்தை நடத்தினார்.
5. கேரள போலீஸ் சட்ட திருத்தம் கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது அல்ல- பினராயி விஜயன் விளக்கம்
கேரள போலீஸ் சட்ட திருத்தம் கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது என பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.