மாவட்ட செய்திகள்

மராட்டியத்தில் கொரோனா தடுப்பு மருந்து தட்டுப்பாடு எதிரொலி; மும்பையில் இன்று தடுப்பூசி போடப்படுமா? மத்திய அரசு மீது மந்திரி பரபரப்பு குற்றச்சாட்டு + "||" + Corona vaccine shortage echoes in the Maharastra; Will Mumbai be vaccinated today? Minister charged with sedition against the Central Government

மராட்டியத்தில் கொரோனா தடுப்பு மருந்து தட்டுப்பாடு எதிரொலி; மும்பையில் இன்று தடுப்பூசி போடப்படுமா? மத்திய அரசு மீது மந்திரி பரபரப்பு குற்றச்சாட்டு

மராட்டியத்தில் கொரோனா தடுப்பு மருந்து தட்டுப்பாடு எதிரொலி; மும்பையில் இன்று தடுப்பூசி போடப்படுமா? மத்திய அரசு மீது மந்திரி பரபரப்பு குற்றச்சாட்டு
நாட்டில் கொரோனா 2-வது அலை ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

மராட்டியத்தில் கொரோனா தடுப்பு மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதால், பல மையங்கள் மூடப்படுகின்றன. இதனால் மும்பையில் இன்று தடுப்பூசி போடப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் மத்திய அரசு மீது மந்திரி ராஜேஷ் தோபே பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்து உள்ளார்.

அசுர வேகத்தில் பரவும் தொற்று

இதில் மராட்டியத்தில் அசுர வேகத்தில் தொற்று பரவி வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 60 ஆயிரத்தை நெருங்கியது. மேலும் ஒரு நாள் உயிரிழப்பு 300-ஐ தாண்டி விட்டது.இதனால் மராட்டியத்தில் கொரோனா தடுப்பூசி போட மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தினமும் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

தடுப்பூசி தட்டுப்பாடு

இந்தநிலையில் தலைநகர் மும்பை உள்பட மாநிலம் முழுவதும் பல மையங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக மும்பையில் நேற்று சில மையங்களில் தடுப்பூசி இருப்பு இல்லை என்று கூறி நுழைவு வாயிலில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. மேலும் அங்கு தடுப்பூசி போட வந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.இது குறித்து மும்பை மேயர் கிஷோரி பெட்னேகர் கூறுகையில், "மும்பையில் இருப்பில் இருக்கும் தடுப்பூசி வியாழக்கிழமை (நேற்று) மாலையுடன் தீர்ந்து விடும். எங்களுக்கு தடுப்பூசி சப்ளை கிடைக்காவிட்டால், வெள்ளிக்கிழமை (நாளை) தடுப்பூசி போடும் பணி நிச்சயமாக நிறுத்தப்படும். மராட்டியம் இதுபோன்ற மோசமான சூழ்நிலையை சந்திப்பது இது தான் முதல் முறை" என்றார்.

மந்திரி பரபரப்பு குற்றச்சாட்டு

இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே பேஸ்புக் நேரலையில் பேசியதாவது:-

மராட்டியம் புவியியல் ரீதியாகவும், மக்கள் தொகையிலும் பெரிய மாநிலம். நாட்டில் மொத்த தொற்று பாதிப்பில் 55 சதவீதத்தினர் மராட்டியத்தை சேர்ந்தவர்கள். இந்தநிலையில் மராட்டியத்திற்கு குறைந்த அளவில் தான் தடுப்பூசியை மத்திய அரசு வழங்கி வருகிறது.

12 கோடி மக்கள் தொகை கொண்ட மராட்டியத்தில் இதுவரை 1 கோடியே 4 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இங்கு 4 லட்சத்து 50 ஆயிரம் பேர் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

6 கோடி மக்கள் தொகை கொண்ட குஜராத்தில், தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை வெறும் 17 ஆயிரம் ஆக உள்ளது. வியாழக்கிழமை (நேற்று) மராட்டியத்துக்கு 7.5 லட்சம் டோஸ் மருந்தை மட்டும் மத்திய அரசு வழங்கி உள்ளது. அதிக கொரோனா பாதிப்பு மற்றும் அதிகளவில் தடுப்பூசி போட்டு வரும் மராட்டியத்திற்கு 7.5 லட்சம் டோஸ்கள் மட்டும் வழங்கப்பட்டு இருப்பது ஏன்?.

குஜராத், உத்தரபிரதேசம்

ஆனால் உத்தரபிரதேசத்திற்கு 48 லட்சம் டோஸ்கள், மத்திய பிரதேசத்திற்கு 40 லட்சம் டோஸ்கள், குஜராத்திற்கு 30 லட்சம் டோஸ்கள், அரியானாவிற்கு 24 லட்சம் டோஸ்கள் வழங்கப்பட்டு உள்ளது.

மத்திய சுகாதார மந்திரியிடம் பேசியதை அடுத்து வருகிற 15-ந் தேதிக்கு பிறகு 17.5 லட்சம் டோஸ் மருந்து தருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

எங்களால் தினமும் 6 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட முடியும். தற்போது எஞ்சியுள்ள 9 லட்சம் டோஸ்கள் மருந்தின் அடிப்படையில், இன்னும் 1½ நாட்கள் மட்டுமே போட முடியும்.

பன்வெல், சத்தாரா, சாங்கிலி உள்ளிட்ட பல இடங்களில் தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டு வருகின்றன. மக்களை திருப்பி அனுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. தடுப்பூசி விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் இடையே மோதல் இருக்கக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா 2-வது அலை முடிந்துவிட்டதா? - நிபுணர்கள் பதில்
நாட்டில் தொடர்ந்து 14-வது நாளாக கொரோனா பாதிப்பு விகிதம் 5 சதவீதத்துக்கு கீழ் பதிவானாலும், 2-வது அலை முடிவுக்கு வந்துவிட்டதாக உறுதிபடக் கூறமுடியாது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
2. நாடு முழுவதும் கொரோனா 2-வது அலையில் கர்ப்பிணி பெண்கள் அதிகம் பாதிப்பு - ஐ.சி.எம்.ஆர் தகவல்
கொரோனா 2-வது அலையில் கர்ப்பிணி பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர். அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. கொரோனா 2-வது அலையை போல 3-வது அலையும் கடுமையானதாக இருக்கலாம்: எஸ்.பி.ஐ ஆய்வறிக்கை
கொரோனா 2-வது அலையை போல 3-வது அலையும் கடுமையானதாக இருக்கலாம் என்று எஸ்.பி.ஐ ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4. கொரோனா 2-வது அலை: டெல்லியில் மட்டும் 103 மருத்துவர்கள் உயிரிழப்பு
கொரோனா 2-ம் அலையில் 513 மருத்துவர்கள் நோய்த் தொற்றுக்கு உயிரிழந்திருப்பதாக இந்திய மருத்துவச் சங்கம் தெரிவித்துள்ளது.
5. கொரோனா 2-வது அலையால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு மத்திய அரசு சலுகை வழங்க பரிசீலனை
கொரோனா 2-வது அலையால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு மத்திய அரசு சலுகை வழங்கக்கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.