செஷல்ஸ் தீவுக்கு 50 ஆயிரம் டோஸ் கொரோனா தடுப்பூசிகளை வழங்கி இருப்பதாக மோடி தகவல்


செஷல்ஸ் தீவுக்கு 50 ஆயிரம் டோஸ் கொரோனா தடுப்பூசிகளை வழங்கி இருப்பதாக மோடி தகவல்
x
தினத்தந்தி 9 April 2021 4:14 AM GMT (Updated: 9 April 2021 4:14 AM GMT)

செஷல்ஸ் தீவுக்கு 50 ஆயிரம் டோஸ் கொரோனா தடுப்பூசிகளை வழங்கி இருப்பதாக மோடி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

ஆப்பிரிக்க நாடான செஷல்ஸ் தீவில் இந்தியாவின் மானிய உதவியுடன் நிறுவப்பட்ட திட்டங்களின் தொடக்க விழா நேற்று காணொலி காட்சி மூலம் நடந்தது. பிரதமர் மோடியும், செஷல்ஸ் தீவின் ஜனாதிபதி வாவல் ராம்கலவனும் காணொலி காட்சி மூலம் கூட்டாக தொடங்கி வைத்தனர்.

இந்த விழாவின் போது இந்தியாவில் கட்டப்பட்ட அதிவேக ரோந்து கப்பலை செஷல்ஸ் கடற்படைக்கு மோடி பரிசாக வழங்கினார். இந்தியாவின் மானிய உதவியுடன் செஷல்சில் நிறுவப்பட்ட 1 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி நிலையத்தையும், மாஜிஸ்திரேட் கோர்ட்டையும், 10 சமுதாய வளர்ச்சி திட்டங்களையும் மோடி தொடங்கி வைத்தார். செஷல்ஸ் தீவுக்கு 50 ஆயிரம் டோஸ் கொரோனா தடுப்பூசிகளை வழங்கி இருப்பதாக மோடி தெரிவித்தார்.

Next Story