நான்கு கோடியே 30 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பு மருந்து இருப்பில் உள்ளது- மத்திய மந்திரி ஹர்ஷவர்தன்


நான்கு கோடியே 30 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பு மருந்து இருப்பில் உள்ளது-  மத்திய மந்திரி ஹர்ஷவர்தன்
x
தினத்தந்தி 9 April 2021 5:31 AM GMT (Updated: 9 April 2021 5:31 AM GMT)

நான்கு கோடியே 30 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பு மருந்து இருப்பில் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி

மராட்டியம், சத்தீஸ்கார், ஒடிசா, ஆந்திரம், ஜார்க்கண்ட் மாநில அரசுகள் தங்களிடம் தேவையான அளவு கொரோனா தடுப்பு மருந்துகள் இருப்பு இல்லை எனத் தெரிவித்துள்ளன. இதனால் கொரோனா தடுப்பூசி மையங்களை மூட வேண்டிய நிலை உள்ளதாகவும் கூறியுள்ளன. 
இதற்குப் பதிலளித்த மத்திய சுகாதாரத்துறை மந்திரி  ஹர்ஷ்வர்தன்  கூறியதாவது:-

கொரோனா தடுப்பு மருந்து தட்டுப்பாடு இல்லை என்றும், 4 கோடியே 30 லட்சம் முறை செலுத்தும் அளவில் கொரோனா தடுப்பு மருந்து கையிருப்பில் உள்ளது.

எந்தவித பாகுபாடும் இல்லாமல் நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே மாதிரியாக கருதிதான் கொரோனா தடுப்பு மருந்துகளை மத்திய அரசு விநியோகித்து வருகிறது. இதில் பா.ஜ.க.ஆள்கிற மாநிலங்களில் ஒரு வகையிலும், பா.ஜ.க. ஆளாத மாநிலங்களில் வேறு வகையில் மருந்து விநியோகம் நடப்பதாக எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் முதலை கண்ணீர் வடிப்பது அவர்களது இயலாமையை மறைக்க மேற்கொள்ளும் செயல்.

நாட்டிலேயே அதிகளவிலான கொரோனா தடுப்பூசிகளை பெற்று டாப் மூன்று மாநிலங்களில் இரண்டு மாநிலங்கள் பா.ஜ.க. ஆட்சி செய்யாத மாநிலங்கள் என நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார். 



Next Story