கொரோனா பாதிப்பு; குணமடைந்தோர் விகிதம் சரிவு: மத்திய சுகாதார மந்திரி எச்சரிக்கை


கொரோனா பாதிப்பு; குணமடைந்தோர் விகிதம் சரிவு:  மத்திய சுகாதார மந்திரி எச்சரிக்கை
x
தினத்தந்தி 9 April 2021 5:55 AM GMT (Updated: 9 April 2021 5:55 AM GMT)

நாட்டில் கொரோனா பாதிப்புகளில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 91.22% ஆக சரிவடைந்து உள்ளது என மத்திய மந்திரி எச்சரிக்கை தெரிவித்து உள்ளார்.

புதுடெல்லி,

நாட்டில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்துவது பற்றி மந்திரிகள் பங்கேற்கும் 24வது உயர்மட்ட குழு கூட்டம் மத்திய சுகாதார மந்திரி ஹர்சவர்தன் தலைமையில் இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது.

இந்த கூட்டத்தில் பேசிய மந்திரி ஹர்சவர்தன், நாட்டில் கொரோனாவில் இருந்து இதுவரை மொத்தம் 1,19,13,292 பேர் குணமடைந்து உள்ளனர்.  கடந்த 3 மாதங்களில் குணமடைந்தோர் விகிதம் 96-97% அளவுக்கு உயர்ந்தது.

ஆனால், இந்த விகிதம் 91.22% ஆக சரிவடைந்து உள்ளது.  எனினும், கடந்த 7 நாட்களாக 149 மாவட்டங்களில் கொரோனா பாதிப்புகள் காணப்படவில்லை என கூறியுள்ளார்.

கடந்த 14 நாட்களாக 8 மாவட்டங்களிலும், கடந்த 21 நாட்களாக 3 மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்புகள் காணப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.  கடந்த 28 நாட்களாக 63 மாவட்டங்களில் ஒரு நபருக்கு கூட கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்று மந்திரி ஹர்சவர்தன் கூறியுள்ளார்.

Next Story