கொரோனா தடுப்பூசி ஏற்றுமதியை நிறுத்த வேண்டும் : பிரதமருக்கு ராகுல் காந்தி கடிதம்


கொரோனா தடுப்பூசி ஏற்றுமதியை நிறுத்த வேண்டும் : பிரதமருக்கு ராகுல் காந்தி கடிதம்
x
தினத்தந்தி 9 April 2021 11:08 AM GMT (Updated: 9 April 2021 11:08 AM GMT)

தேவைப்படும் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் வேகம் மீண்டும் அதிகரித்துள்ளது. மின்னல் வேகத்தில் பரவி வரும் கொரோனாவால் பல மாநிலங்களில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.  தடுப்பூசி போடும் பணியும் விரைவு படுத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில், மராட்டியம், ஒடிசா, ஜார்க்கண்ட், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அந்தந்த மாநில அரசுகள் தெரிவித்துள்ளன. 

இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு தடுப்பூசி விவகாரம் தொடர்பாக கடிதம் எழுதியுள்ளார்.  அதில் கூறியிருப்பதாவது:- கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா  தடுப்பூசி பற்றாக்குறை மிகப்பெரும் பிரச்சினையாகும்.   நாட்டில் தேவைப்படும் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க வகை செய்ய  வேண்டும். தடுப்பூசி ஏற்றுமதி உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். 

தற்போதைய வேகத்தில் கொரோனா தடுப்பூசி இயக்கம் இருந்தால்  பொருளாதாரத்தில் கடும் விளைவுகள் ஏற்படும்.  தடுப்பூசியை கொள்முதல் செய்ய மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 

Next Story