டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 8,521- பேருக்கு கொரோனா


டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 8,521- பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 9 April 2021 3:17 PM GMT (Updated: 9 April 2021 3:17 PM GMT)

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 8,521- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் கடந்த  24 மணி நேரத்தில் 8,521- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 5,032- ஆக உள்ளது. தொற்று பாதிப்பால் இன்று மட்டும் 39- பேர் உயிரிழந்துள்ளனர். 

டெல்லியில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 7 லட்சத்து 06 ஆயிரத்து 526- ஆக உள்ளது. கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்து 68 ஆயிரத்து 699 ஆக உள்ளது. தொற்று பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 11,196- ஆக உள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 26,631- ஆக உள்ளது. 

Next Story