தேசிய செய்திகள்

4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு அமித்ஷாவே முழு பொறுப்பு: மம்தா பானர்ஜி + "||" + Amit Shah Responsible, Says Mamata Banerjee On Bengal Poll Violence

4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு அமித்ஷாவே முழு பொறுப்பு: மம்தா பானர்ஜி

4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு  அமித்ஷாவே முழு பொறுப்பு: மம்தா பானர்ஜி
கூச்பிகார் மாவட்டம் சித்லாகுச்சியில் உள்ள மாதாபங்கா பகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடிக்கு வெளியே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் 4 பேர் கொல்லப்பட்டனர்.
கொல்கத்தா,

மேற்கு வங்கத்தில் 44 தொகுதிகளுக்கான 4-ஆம் கட்ட வாக்குப் பதிவு சனிக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கூச்பிகார் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி அருகே  நான்கு பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

இதையடுத்து,  கூச்பிகார் மாவட்டத்தில் உள்ள தேர்தல் நடைபெறும் வாக்குச்சாவடி 125-இல் தேர்தல் நிறுத்தப்பட்டுள்ளது.  வாக்களிக்க வந்தவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிற சூழலில்,  பாஜக - திரிணாமூல் காங்கிரஸ் இடையே வார்த்தை போர் மூண்டுள்ளது. இரு கட்சிகளும் மாறி மாறி குற்றம் சுமத்தி வருகின்றன. 

இந்த நிலையில், துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவே முழு பொறுப்பு என்று மம்தா பானர்ஜி கடுமையாக சாடியுள்ளார். மம்தா பானர்ஜி கூறியிருப்பதாவது: 

இன்று நடைபெற்ற சம்பவத்திற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவே முழு பொறுப்பு. இச்சம்வத்திற்கு அவரே முழு சதிகாரர். மத்திய படைகள் மீது நான் குற்றம் சுமத்த மாட்டேன். ஏனெனில், உள்துறை அமைச்சரின் உத்தரவின் பேரிலேயே அவர்கள் செயல்பட்டுள்ளனர்” என்றார். 

கூச்பிகார் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடியில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று கொண்டிருந்த போது, வாக்குச்சாவடிக்கு  வெளியே மத்திய பாதுகாப்பு படையினருடனான மோதலின் போது, நான்கு பேர்  சுட்டுக்கொல்லப்பட்டனர். 

தொடர்புடைய செய்திகள்

1. நந்திகிராம் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை கோரிய வழக்கு; ஆக.12 ஆம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு
நந்திகிராம் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், ஒப்புகை சீட்டுகளை பாதுகாப்பாக வைக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
2. உடல்நலக்குறைவு காரணமாக மேற்கு வங்காள நிதி மந்திரி பதவியில் இருந்து விலக வாய்ப்பு...!
மேற்கு வங்காள நிதி மந்திரி அமித் மித்ரா உடல்நலக்குறைவு காரணமாக பதவியில் இருந்து விலக வாய்ப்புள்ளது என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
3. கூட்டுறவு அமைப்புகளுக்கு அதிக அதிகாரம்: அமித்ஷா
அனைத்து கூட்டுறவு அமைப்புகளையும் அதிக அதிகாரம் கொண்டவையாக மாற்ற மத்திய அரசு உறுதி பூண்டுள்ளதாக, தன்னை சந்தித்த கூட்டுறவுத்துறை தலைவர்களிடம் அமித்ஷா தெரிவித்தார்.
4. குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் - உள்துறை மந்திரி அமித்ஷா சந்திப்பு
குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று சந்தித்தார்.
5. பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும்; மோடிக்கு மம்தா பானர்ஜி கடிதம்
பெட்ரோல், டீசல் மீதான மத்திய அரசின் வரியை குறைக்குமாறு பிரதமர் மோடிக்கு மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.