மேற்குவங்காளம்: 4-ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு


மேற்குவங்காளம்: 4-ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு
x
தினத்தந்தி 10 April 2021 2:20 PM GMT (Updated: 10 April 2021 2:20 PM GMT)

மேற்குவங்காள சட்டசபை தேர்தலில் 4-ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது.

கொல்கத்தா,

294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்காள சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே 3 கட்ட தேர்தல் நிறைவடைந்த நிலையில் 4- ம் கட்ட தேர்தல் இன்று நடைபெற்றது. 44 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. மொத்தம் 1 கோடியே 15 லட்சத்து 81 ஆயிரத்து 22 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதியுடையவர்களாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

இத்தேர்தலில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜனதா, காங்கிரஸ் இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம், 373 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 
 
மேற்குவங்காளத்தில் இன்று நடைபெற்ற நடைபெற்ற 4-ம் கட்ட தேர்தலில் பல்வேறு பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறியது. இதற்கிடையில், மாலை 6 மணி நிலவரப்படி, அம்மாநிலத்தில் 76.16 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியிருந்தது.

இந்நிலையில், மேற்குவங்காளத்தில் 4-ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. மாலை 7 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்ததையடுத்து வாக்குப்பெட்டிகளை சீல் வைக்கும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story