தேசிய செய்திகள்

கொரோனா பரவல் அதிகரிப்பால் டெல்லியில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு + "||" + Delhi's Strict Covid Curbs: 50% Occupancy At Restaurants, Metro, Theatres

கொரோனா பரவல் அதிகரிப்பால் டெல்லியில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு

கொரோனா பரவல் அதிகரிப்பால் டெல்லியில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு
கொரோனா வைரஸ் தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் டெல்லியில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
புதுடெல்லி,

டெல்லியில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிக கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகளை டெல்லி அரசு அறிவித்துள்ளது.  அதன் விவரங்களை கீழ் காணலாம்.
  • திருமண விழாக்களில் அதிகபட்சமாக 50 பேர் வரை மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். 
  • உணவு விடுதிகள், பார்களில் 50 சதவீத இருக்கைகளை மட்டுமே நிரப்ப வேண்டும். 
  • சினிமா திரையரங்குகளும் 50 சதவீத பார்வையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.  
  • மராட்டியத்தில் இருந்து டெல்லிக்கு விமானம் மூலம் வரும் பயணிகள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருப்பது கட்டாயம். 
  • கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இல்லாமல் வருகை தந்தால் கட்டாயமாக 14 நாட்கள் தனிமைப்படுத்தவடுவர்.
  • பார்வையாளர்கள் இன்றி போட்டிகளை மைதானங்களில் நடத்திக்கொள்ளலாம்.
  • வரும் 30 ஆம் தேதி வரை இந்த புதிய கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. 

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 7,897- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரிப்பால் ஏற்கனவே டெல்லியில் இரவு நேர ஊரடங்கு அமலில் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

1. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16.18 கோடியாக உயர்வு
உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 13.96 கோடியாக அதிகரித்துள்ளது
2. டெல்லியில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 10,489 பேருக்கு தொற்று உறுதி
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10,489 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக ஒரே நாளில் 4,120 பேர் உயிரிழப்பு
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 62 ஆயிரத்து 727 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
4. கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 39,998- பேருக்கு கொரோனா
கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,998- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. குஜராத்தில் மேலும் 11,017- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று
குஜராத்தில் மேலும் 11,017- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.