உத்தர பிரதேசத்தில் ஒரே நாளில் 12,787- பேருக்கு கொரோனா


உத்தர பிரதேசத்தில் ஒரே நாளில்  12,787- பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 10 April 2021 5:29 PM GMT (Updated: 10 April 2021 5:29 PM GMT)

உத்தர பிரதேசத்தில் 12,787- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

லக்னோ, 

உத்தர பிரதேசத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 12,787- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  மாநில தலைநகரான லக்னோவில் மட்டும் 4,059- பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 58,799- ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து குணம் அடைவோர் விகிதம் 90 ஆக உள்ளது. 

உத்தர பிரதேசத்தில் தொற்று பாதிப்பால் இன்று மட்டும் 48- பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அடுத்த வாரம் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் அழைப்பு விடுத்துள்ளார். கொரோனா தொற்று அதிகரிப்பால் நொய்டா, அலகாபாத், மீரட், பேரலி, காசியாபாத் உள்ளிட்ட நகரங்களில் இரவு ஊரடங்கு அமலில் இருப்பது குறிப்பிடத்தக்கது. 


Next Story