தேசிய செய்திகள்

மேற்கு வங்கத்தில் 4ஆம் கட்டத் தேர்தலில் 76.16 சதவீத வாக்குகள் பதிவு + "||" + West Bengal elections: Voting for conflict-ridden phase IV polls ends with 76.16 pc turnout

மேற்கு வங்கத்தில் 4ஆம் கட்டத் தேர்தலில் 76.16 சதவீத வாக்குகள் பதிவு

மேற்கு வங்கத்தில் 4ஆம் கட்டத் தேர்தலில் 76.16 சதவீத வாக்குகள் பதிவு
மேற்கு வங்கத்தில் நடைபெற்ற 4-ஆம் கட்டத் தோதலில் 76.16 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
கொல்கத்தா,

மேற்கு வங்கத்தில்  4-ஆம் கட்டமாக  44 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிமுதல் இரவு 7 மணிவரை நடைபெற்றது. இந்நிலையில், மொத்தமுள்ள 44 தொகுதிகளிலும் திரிணமுல், பாஜக கட்சிகள் போட்டியிடுகின்றன.

மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் 22 தொகுதிகளிலும், அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் 9 தொகுதிகளிலும், மற்ற கூட்டணிக் கட்சிகள் மீதமுள்ள இடங்களிலும் போட்டியிடுகின்றன. மாநிலத்தில் ஆட்சியைப் பிடிப்பதற்கு திரிணமுல், பாஜக, இடதுசாரிகள்-காங்கிரஸ் கூட்டணி இடையே மும்முனைப் போட்டி நிலவி வருகிறது. முக்கியமாக, திரிணமுல்-பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது.

தோதல் நடைபெற்ற தொகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. எனினும், பல இடங்களில் வன்முறைகள் அரங்கேறின. கூச் பீகார் மாவட்டத்தில் உள்ள சிதல்குச்சி வாக்குச்சாவடியில் ஏற்பட்ட வன்முறையின்போது மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்தனர்.

இதையடுத்து கூச் பீகார் மாவட்டத்துக்கு அடுத்த 72 மணிநேரத்திற்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வன்முறைக்கு மத்தியிலும் மேற்கு வங்கத்தில் மக்கள் தங்களது ஜனநாயகக் கடைமையை தவறாமல் ஆற்றியுள்ளனர். விறுவிறுப்புடன் நடந்த 4ஆம் கட்டத் தேர்தலில் 76.16 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.