தேசிய செய்திகள்

கர்நாடகாவில் பெங்களூரு, மைசூரு உள்பட 8 நகரங்களில் இரவு ஊரடங்கு அமல் + "||" + Karnataka Visuals from Bengaluru where curfew has been imposed between 10 pm and 5 am to check the spread of COVID-19.

கர்நாடகாவில் பெங்களூரு, மைசூரு உள்பட 8 நகரங்களில் இரவு ஊரடங்கு அமல்

கர்நாடகாவில் பெங்களூரு, மைசூரு உள்பட 8 நகரங்களில் இரவு ஊரடங்கு அமல்
கர்நாடகாவில் பெங்களூரு, மைசூரு உள்பட 8 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது.
பெங்களூரு,

கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் பெங்களூரு, மைசூரு உள்பட 8 நகரங்களில் கர்நாடக அரசு இரவு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. இந்த ஊரடங்கு நேற்று 10 மணி முதல் அமலுக்கு வந்தது. 

பெங்களூருவில் இரவு ஊரடங்கை மீறி வெளியே சுற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் கமல்பந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா காரணமாக இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் எந்த காரணமும் இல்லாமல் மக்கள் வெளியே வர வேண்டாம் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என்று போலீசார் ஒலி பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினர்.

கொரோனா பரவல் சங்கிலியை உடைக்கவே இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதாகவும், மக்கள் அலட்சியமாக இருக்க கூடாது என்றும் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் தெரிவித்துள்ளார்.