கர்நாடகத்தில் புதிதாக 6,955 பேருக்கு கொரோனா


கர்நாடகத்தில் புதிதாக 6,955 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 10 April 2021 9:20 PM GMT (Updated: 10 April 2021 9:20 PM GMT)

கர்நாடகத்தில் புதிதாக 6,955 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளதாக சுகாதாரத்துறை கூறியுள்ளது.

பெங்களூரு:

36 பேர் சாவு

  கர்நாடகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

  மாநிலத்தில் நேற்று 98 ஆயிரத்து 790 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 6,955 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது. இதன்மூலம் கொரோனாவுக்கு பாதித்தோர் எண்ணிக்கை 10 லட்சத்து 55 ஆயிரத்து 40 ஆக உயர்ந்து உள்ளது.

  இதுவரை 2 கோடியே 25 லட்சத்து 57 ஆயிரத்து 552 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது. வைரஸ் தொற்றுக்கு நேற்று மேலும் 36 பேர் இறந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 12 ஆயிரத்து 849 ஆக அதிகரித்து உள்ளது.

தீவிர சிகிச்சையில் 405 பேர்

  பாகல்கோட்டையில் 44 பேர், பல்லாரியில் 62 பேர், பெலகாவியில் 75 பேர், பெங்களூரு புறநகரில் 152 பேர், பெங்களூரு நகரில் 4,384 பேர், பீதரில் 215 பேர், சாம்ராஜ்நகரில் 35 பேர், சிக்பள்ளாப்பூரில் 74 பேர், சிக்கமகளூருவில் 36 பேர், சித்ரதுர்காவில் 59 பேர், தட்சிண கன்னடாவில் 137 பேர், தாவணகெரேயில் 49 பேர், தார்வாரில் 88 பேர், கதக்கில் 17 பேர், ஹாசனில் 100 பேர், ஹாவேரியில் 16 பேர், கலபுரகியில் 276 பேர், குடகில் 20 பேர், கோலாரில் 121 பேர், கொப்பலில் 28 பேர், மண்டியாவில் 119 பேர், மைசூருவில் 266 பேர், ராய்ச்சூரில் 30 பேர், ராமநகரில் 72 பேர், சிவமொக்காவில் 47 பேர், துமகூருவில் 206 பேர், உடுப்பியில் 68 பேர், உத்தர கன்னடாவில் 64 பேர், விஜயாப்புராவில் 71 பேர், யாதகிரியில் 24 பேர் புதிதாக கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டனர்.

  பெங்களூரு நகரில் 19 பேர், மைசூருவில் 5 பேர், பீதர், தார்வார், கலபுரகி, துமகூருவில் தலா 2 பேர், பல்லாரி, சாம்ராஜ்நகர், ஹாசன், உத்தர கன்னடாவில் தலா ஒருவர் என 36 பேர் இறந்தனர். 20 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை. நேற்று 3,350 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதுவரை 9 லட்சத்து 80 ஆயிரத்து 519 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். 61 ஆயிரத்து 653 பேர் சிகிச்சையில் உள்ளனர். 405 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
  இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

Next Story