தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசிக்கு பற்றாக்குறை: மத்திய அரசு மீது ராகுல் காந்தி பாய்ச்சல் + "||" + "No Control Of Covid, Jobs...": Rahul Gandhi's Swipe At PM Modi

கொரோனா தடுப்பூசிக்கு பற்றாக்குறை: மத்திய அரசு மீது ராகுல் காந்தி பாய்ச்சல்

கொரோனா தடுப்பூசிக்கு பற்றாக்குறை: மத்திய அரசு மீது ராகுல் காந்தி பாய்ச்சல்
கொரோனா பெருந்தொற்று சூழலை மத்திய அரசு மோசமாக கையாண்டு வருவதாக ராகுல் காந்தி தொடக்கம் முதலே விமர்சித்து வருகிறார்.
புதுடெல்லி,

நாட்டில் கொரோனா வைரஸ் 2-வது அலை பல்வேறு மாநிலங்களில் தீவிரமாகப் பரவி வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் நாட்டில் 1.52 லட்சம் பேர் புதிதாக நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. 

தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே, மராட்டியம் உள்ளிட்ட பல மாநிலங்களில்  கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை இருப்பதாக கூறி வருகின்றன. அதேபோல், கொரோனா தடுப்பூசி போடுவதற்கு விதிக்கப்பட்டுள்ள வயது வரம்பை தளர்த்த வேண்டும் என்றும் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் வலியுறுத்தி வருகின்றனர்.  

இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:  தடுப்பூசி போதுமான அளவில் இல்லாவிட்டால், கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியாது. வேலைவாய்ப்பு இல்லை, தொழிலாளர்கள், விவசாயிகளுக்கு நிவாரண உதவி இல்லை, குறு,சிறு,நடுத்தர தொழில்களுக்கு பாதுகாப்பில்லை, நடுத்தரக் குடும்பத்தினரும் மனநிறைவுடன் இல்லை. மாம்பழம் சாப்பிடுவது சரிதான், ஆனால், குறைந்த பங்களிப்பை சாமானிய மனிதருக்கு வழங்கிட வேண்டும்” எனத்தெரிவித்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. சர்க்கரை நோய், ரத்த கொதிப்பு பாதிப்புள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்; சுகாதாரத்துறை செயலர் அறிவுரை
சர்க்கரை நோய், ரத்தகொதிப்பு பாதிப்பு உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும் என்று சுகாதாரத்துறை செயலர் அறிவுரை கூறினார்.
2. கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார் நடிகர் ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது இல்லத்தில் வைத்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
3. ஜூன் மாதத்திற்குள் கோவேக்சின் தடுப்பூசி உற்பத்தி இரு மடங்கு அதிகரிக்கப்படும்: மத்திய அரசு
ஜூன் மாதத்திற்குள் கோவேக்சின் தடுப்பூசி உற்பத்தி இரு மடங்கு அதிகரிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
4. “சடலங்கள் ஆற்றில் மிதக்கின்றன” மத்திய அரசு மீது ராகுல் காந்தி கடும் விமர்சனம்
கொரோனா பெருந்தொற்று விவகாரத்தை மத்திய அரசு முறையாகக் கையாளவில்லை என்று ராகுல் காந்தி தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்
5. மத்திய அரசு தனது பணியை சரியாகச் செய்திருந்தால், இந்தநிலை வந்திருக்காது: ராகுல் காந்தி பாய்ச்சல்
மத்திய அரசு தனது பணியை சரியாகச் செய்திருந்தால், இந்தநிலை வந்திருக்காது என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.