உத்தர பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 15,353 பேருக்கு கொரோனா பாதிப்பு + "||" + In Uttar Pradesh, 15,353 people have been affected by corona in the last 24 hours
உத்தர பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 15,353 பேருக்கு கொரோனா பாதிப்பு
உத்தர பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 15,353 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
லக்னோ,
உத்தர பிரதேச மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 15,353 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் உத்தர பிரதேசத்தில் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6,11,622 ஆக உயர்ந்துள்ளது.
மாநிலம் முழுவதும் தற்போது 71,241 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக உத்தர பிரதேச மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அங்கு இதுவரை 85,15,296 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் இரவு ஊரடங்கினை நடைமுறைப்படுத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், ஏப்ரல் 30 வரை பள்ளிகள் மூடப்படுவதாகவும் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனாவை எதிர்கொள்ள இந்தியாவுக்கு அடுத்த சில வாரங்களில் கூடுதலாக 5 லட்சம் அவசர சிகிச்சை படுக்கைகள், 3½ லட்சம் மருத்துவ பணியாளர்கள் தேவை என்பது உள்ளிட்ட அதிர்ச்சிகரமான தகவல்களை பிரபல டாக்டர் வெளியிட்டு உள்ளார்.
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் தனியார் மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளிடம் இருந்து அதிக கட்டணம் வசூலித்து வருவதாக மாநகராட்சிக்கு புகார்கள் வந்தது.
புதுவையில் கோர தாண்டவமாடும் 2-வது அலையில் போலீசார் 107 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. மாநிலத்தில் ஒரேநாளில் 1,258 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.