கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ரெம்டெசிவர் மருந்து ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை


கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ரெம்டெசிவர் மருந்து ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை
x
தினத்தந்தி 11 April 2021 12:12 PM GMT (Updated: 11 April 2021 12:12 PM GMT)

கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ரெம்டெசிவர் ஊசி மருந்து ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.52 லட்சத்தை தாண்டியது. மின்னல் வேகத்தில் பரவும் கொரோனாவைக் கட்டுப்படுத்த தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களிலும் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. 

தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ரெம்டெசிவர் ஊசி மருந்து ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால், உள்நாட்டில் தேவை அதிகரிக்கும் எனக்கருதி மத்திய அரசு வைரஸ் எதிர்ப்பு மருந்தான ரெம்டெசிவர் ஏற்றுமதிக்கு  தடை விதித்து  இருக்கலாம் எனத்தெரிகிறது. 


Next Story