கர்நாடகாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியது


கர்நாடகாவில்  ஒருநாள் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியது
x
தினத்தந்தி 11 April 2021 2:15 PM GMT (Updated: 11 April 2021 2:15 PM GMT)

கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது.

பெங்களூரு,

கர்நாடகாவில்  கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த சில வாரங்களாக அதிகரித்துக் கொண்டே வருகிறது.  இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் அம்மாநிலத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 10,250- ஆக உள்ளது. தொற்றில் இருந்து 2,638- பேர் குணம் அடைந்துள்ள நிலையில், 40 பேர் கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்துள்ளனர். 

கர்நாடகாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 10 லட்சத்து 65 ஆயிரத்து 290- ஆக உயர்ந்துள்ளது. தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 9 லட்சத்து 83 ஆயிரத்து 157- ஆக இருக்கிறது. தொற்றுடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 69,225- ஆக  உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 12,889-ஆக அதிகரித்துள்ளது. 

Next Story