ரெம்டெசிவிர் மருந்து தடையின்றி கிடைக்க மாவட்டந்தோறும் கட்டுப்பாட்டு அறை - மராட்டிய அரசு முடிவு


ரெம்டெசிவிர் மருந்து தடையின்றி கிடைக்க மாவட்டந்தோறும் கட்டுப்பாட்டு அறை - மராட்டிய அரசு முடிவு
x
தினத்தந்தி 11 April 2021 8:24 PM GMT (Updated: 11 April 2021 8:24 PM GMT)

நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து தடையின்றி கிடைக்க மாவட்டந்தோறும் கட்டுப்பாட்டு அறையை அமைக்க மராட்டிய அரசு முடிவு செய்து உள்ளது.

மும்பை, 

மராட்டியத்தில் 2-வது கொரோனா அலை அசுர வேகத்தில் பரவிவருகிறது. நேற்று முன்தினம் மாநிலத்தில் 55 ஆயிரத்து 411 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். மேலும் 5¼ லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதன் காரணமாக நோய் தீவிரம் அதிகம் உள்ள நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் ரெம்டெசிவிர் மருந்துக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த மருந்து கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதை தடுக்கவும், தேவையான நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் தடையின்றி கிடைக்கவும் மாநில அரசு மாவட்டந்தோறும் கட்டுப்பாட்டு அறையை அமைக்க முடிவு செய்து உள்ளது. இது தொடர்பாக சுகாதார சேவை கமிஷனர் என். ராமசாமி அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் கடிதம் எழுதி உள்ளார்.

இதேபோல அரசும் ரெம்டெசிவிர் மருந்துக்கு ரூ.1,100 முதல் ரூ.1,400 விலை நிர்ணயம் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் உற்பத்தியை அதிகாிக்கவும் மருந்து நிறுவனங்களை வலியுறுத்தி உள்ளது.

Next Story