மராட்டியத்தில் புதிய உச்சமாக ஒரே நாளில் 63 ஆயிரத்து 294 பேருக்கு கொரோனா; 349 பேர் பலி


மராட்டியத்தில் புதிய உச்சமாக ஒரே நாளில் 63 ஆயிரத்து 294 பேருக்கு கொரோனா; 349 பேர் பலி
x
தினத்தந்தி 12 April 2021 4:07 AM GMT (Updated: 12 April 2021 4:07 AM GMT)

மராட்டியத்தில் நேற்று புதிய உச்சமாக 63 ஆயிரத்து 294 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 349 பேர் பலியாகி உள்ளனர்.

புதிய உச்சம்

மராட்டியத்தில் கொரோனா தொற்று அசுர வேகத்தில் பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்தவும், நோய் பரவல் சங்கிலியை உடைக்கவும் வார இறுதிநாள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் இது எந்த வகையிலும் பலன் அளிப்பதாக தெரியவில்லை.

இதில் நேற்று பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டு உள்ளது. நேற்று மாநிலத்தில் 63 ஆயிரத்து 294 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 7 ஆயிரத்து 245 ஆக உயர்ந்து உள்ளது.

பலியாகினர்

இதில் 27 லட்சத்து 82 ஆயிரத்து 161 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று 34 ஆயிரத்து 8 பேர் குணமாகி வீடு திரும்பினர்.

இதேபோல மாநிலத்தில் மேலும் 349 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியானார்கள். இதனால் வைரஸ் நோய்க்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 57 ஆயிரத்து 987 ஆக உயர்ந்து உள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது 5 லட்சத்து 65 ஆயிரத்து 587 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 31 லட்சத்து 75 ஆயிரத்து 585 பேர் வீடுகளிலும், 25 ஆயிரத்து 694 பேர் தனிமை மையங்களிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.


Next Story