இந்தியாவில் கொரோனா பாதிப்பில் புதிய உச்சம்: புதிதாக 1,68,912 பேருக்கு தொற்று உறுதி


இந்தியாவில் கொரோனா பாதிப்பில் புதிய உச்சம்: புதிதாக 1,68,912 பேருக்கு தொற்று உறுதி
x
தினத்தந்தி 12 April 2021 4:41 AM GMT (Updated: 12 April 2021 4:41 AM GMT)

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,68,912 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலையின் தாக்கம் அதிவேகமாக உள்ளது. முதல் அலையை கட்டுப்படுத்த முடிந்த நிலையில், இந்த 2-வது அலை இந்தியாவுக்கு மாபெரும் சவாலாக அமைந்துள்ளது. ஒவ்வொரு நாளும் 1 லட்சத்தைத்தாண்டி பாதிப்பு பதிவாகி வருகிறது. 

அந்த வகையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,68,912 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,35,27,717 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் இன்று ஒரே நாளில் 904 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,70,179 ஆக உயர்ந்துள்ளது. 

இந்தியாவில் இன்று ஒரே நாளில் 75,086 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,21,56,529 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு 12,01,009 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் இதுவரை 10,45,28,565 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில் இதுவரை 25,78,06,986 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்தியா முழுவதும் நேற்று 11,80,136 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

Next Story