ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்மந்திரி மெகபூபா முப்தியின் மகளுக்கு கொரோனா தொற்று உறுதி


ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்மந்திரி மெகபூபா முப்தியின் மகளுக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 12 April 2021 11:57 AM GMT (Updated: 12 April 2021 11:57 AM GMT)

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்மந்திரி மெகபூபா முப்தியின் மகள் இல்டிஜா முப்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீநகர்,

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்ட தகவலில் கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 68 ஆயிரத்து 912 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பரவியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்திலும் வைரஸ் பரவல் வெகுவாக அதிகரித்து வருகிறது. யூனியன் பிரதேசத்தில் நேற்று 915 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அங்கு கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 38 ஆயிரத்து 390 ஆக அதிகரித்துள்ளது.  

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்மந்திரியும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தியின் இளைய மகள் இல்டிஜா முப்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக மெகபூபா முப்தி இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், எனது இளைய மகள் இல்டிஜாவுக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதை ஊடகங்களுக்கு தெரியப்படுத்துகிறேன். மருத்துவர்களின் அறிவுரைப்படி, அவர் தனிமைப்படுத்திக்கொண்டு தேவையான முன்னெச்சரிகை நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்’ என்றார்.

Next Story