தேசிய செய்திகள்

கேரளாவில் 3 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் 30-ந் தேதி நடைபெறும் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு + "||" + High Court directs EC to hold polls for 3 Rajya Sabha seats in Kerala before tenure of current Assembly ends

கேரளாவில் 3 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் 30-ந் தேதி நடைபெறும் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

கேரளாவில் 3 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் 30-ந் தேதி நடைபெறும் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு
கேரளாவில் 3 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் 30-ந் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
புதுடெல்லி, 

கேரள மாநிலத்தில் இருந்து நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அப்துல் வகாப் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்), கே.கே.ராகேஷ் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), வயலார் ரவி (காங்கிரஸ்) ஆகியோரின் பதவிக்காலம் வருகிற 21-ந் தேதி முடிவடைகிறது. 

இந்நிலையில், அந்த இடங்களுக்கான தேர்தல் இம்மாதம் 30-ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்துள்ளது. இதற்கான அறிவிக்கை செவ்வாய்க்கிழமை (இன்று) வெளியிடப்படும் என்றும், ஏப்ரல் 30-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தேர்தல் நடைபெறும் என்றும், அன்றைய தினமே வாக்குகள் எண்ணப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் தற்போது காலியாகும் 3 இடங்களுக்கு கடந்த 12-ம் தேதி தேர்தல் நடைபெறவிருந்தது. ஆனால் அந்த தேர்தலை தேர்தல் ஆணையம் திடீரென நிறுத்திவைத்திருந்தது. இந்நிலையில் குறிப்பிட்ட 3 இடங்களுக்கான தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு கேரள ஐகோர்ட்டு அறிவுறுத்தியது. அதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவில் கல்வி மந்திரி ராஜினாமா கோரிக்கை நிராகரிப்பு; சட்டசபையை எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன
கேரள சட்டசபையில் 2015-ம் ஆண்டு பெரும் அமளி ஏற்பட்டது. பொதுச்சொத்துக்கு சேதம் விளைவிக்கப்பட்டது. இது தொடர்பாக மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சி தலைமையிலான இடதுசாரி எம்.எல்.ஏ.க்கள் மீது தொடரப்பட்ட வழக்கை திரும்பப்பெற முடியாது என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
2. கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 61 ஆக உயர்வு: மாநில சுகாதாரத்துறை
கேரளாவில் இன்று புதிதாக மேலும் 5 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.
3. கேரளாவில் புதிதாக 22,064 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 128 பேர் பலி
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 22,064 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. கேரளாவில் புதிதாக 22,056 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 131 பேர் பலி
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 22,056 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. கேரளாவில் ஜிகா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 56 ஆக உயர்வு: மாநில சுகாதாரத்துறை
கேரளாவில் இன்று புதிதாக மேலும் 5 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.