தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் வாய்ப்பு 85 சதவிகிதம் குறைவு: மத்திய அரசு


தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள்  மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் வாய்ப்பு 85 சதவிகிதம் குறைவு: மத்திய அரசு
x
தினத்தந்தி 13 April 2021 1:05 PM GMT (Updated: 13 April 2021 1:05 PM GMT)

தடுப்பூசி போட்டுக் கொண்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் வாய்ப்பு 85 சதவிகிதம் குறைவு என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

 மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் மற்றும் ஐசிஎம்ஆர் இயக்குநர் ஆகியோர்  இன்று செய்தியாளர்களுக்கு  கூட்டாக பேட்டி அளித்தனர்.  அப்போது அவர் கூறியதாவது:- 

தடுப்பூசி போட்டுக்கொண்டால் தொற்று ஏற்படும் வாய்ப்பு குறைவுடன் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது. தடுப்பூசி போட்டுக் கொண்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் வாய்ப்பு 85 சதவிகிதம் குறைவு. நாட்டில் கொரோனா தடுப்பூசிக்கு பற்றாக்குறை இல்லை.  

மாநில அரசுகள் சரியான திட்டமிடுதலுடன் தடுப்பூசியை பயன்படுத்தினால் பற்றாக்குறை இருக்காது. மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 1.67 கோடி தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன. இந்த மாத இறுதிக்குள் 2 கோடியே 1 லட்சத்து 22 ஆயிரத்து 960  தடுப்பூசிகள் வழங்கப்பட உள்ளது”என்றார்.


Next Story