தேசிய செய்திகள்

மேற்கு வங்காள பா.ஜனதா தலைவர் திலீப் கோசுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் + "||" + EC notice to Bengal BJP chief Dilip Ghosh for alleged remarks over Sitalkuchi poll violence

மேற்கு வங்காள பா.ஜனதா தலைவர் திலீப் கோசுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ்

மேற்கு வங்காள பா.ஜனதா தலைவர் திலீப் கோசுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ்
மேற்கு வங்காள பா.ஜனதா தலைவர் திலீப் கோசுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியது.
கொல்கத்தா, 

மேற்கு வங்காள சட்டசபை தேர்தல் 4-வது கட்ட வாக்குப்பதிவின்போது, துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலியானார்கள். இதுபற்றி அம்மாநில பா.ஜனதா தலைவர் திலீப் கோஷ் பேசுகையில், ‘‘யாராவது எல்லை மீறி சென்றால், இதேபோன்ற சம்பவம் மேலும் பல இடங்களில் நடக்கும்’’ என்றார். இதுகுறித்து தேர்தல் கமிஷனுக்கு புகார்கள் சென்றன.

இந்தநிலையில், திலீப் கோஷிடம் விளக்கம் கேட்டு தேர்தல் கமிஷன் நேற்று நோட்டீஸ் அனுப்பியது. அதில், திலீப் கோஷ், தேர்தல் நடத்தை விதிகளை மீறி விட்டதாக தாங்கள் கருதுவதாக தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.
திலீப் கோஷ் தனது பேச்சுக்கு நாளை  (புதன்கிழமை) காலை 10 மணிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மேற்கு வங்க முதல்வராக 3-வது முறையாக பதவியேற்றார் மம்தா பானர்ஜி
மேற்கு வங்க முதல்வராக மம்தா பானர்ஜி 3-வது முறையாக பதவியேற்றார்.
2. என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியுடன் பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு
என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியுடன் பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்தித்தனர்.
3. தேர்தல் வெற்றிக்கொண்டாட்டங்களை தடை செய்யாத அதிகாரிகள் பணியிடை நீக்கம் தலைமைச் செயலாளருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
தேர்தல் வெற்றிக்கொண்டாட்டங்களை தடை செய்யாத அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று தலைமைச் செயலாளருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
4. அசாமில் ஆட்சியை தக்க வைக்கிறது பாஜக ?
அசாம் மாநிலத்தில் பாஜக அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
5. கேரளாவில் இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆட்சியை தக்க வைக்க வாய்ப்பு
கேரளாவில் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், ஆளுங்கட்சியான இடதுசாரி கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது.