நவராத்திரி, யுகாதி பண்டிகைகளை ஒட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து


நவராத்திரி, யுகாதி பண்டிகைகளை ஒட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
x
தினத்தந்தி 13 April 2021 9:25 PM GMT (Updated: 13 April 2021 9:25 PM GMT)

நவராத்திரி, யுகாதி உள்ளிட்ட பண்டிகைகளை ஒட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

நவராத்திரி
நவராத்திரி பண்டிகையை ஒட்டி பிரதமர் மோடி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘இந்த மங்களகரமான தருணம், மக்களின் வாழ்வில் நலத்தையும், மகிழ்ச்சியையும் கொண்டுவரட்டும்’ என்று கூறியுள்ளார்.

யுகாதி
ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மக்களின் புத்தாண்டு தினமான யுகாதியை ஒட்டியும் மோடி வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.அதேபோல மராட்டிய, கொங்கணி மக்களின் புத்தாண்டு தினமான குடி பட்வாவை ஒட்டி, ‘வரும் ஆண்டு, எல்லோரது வாழ்விலும் நல்ல நலத்தையும், வளத்தையும் கொண்டு வரட்டும்’ என்று தனது வாழ்த்துச் செய்தியில் மோடி கூறியுள்ளார்.

பைசாகி
இந்துக்கள், சீக்கியர்களால் சூரியப் புத்தாண்டாக கொண்டாடப்படும் பைசாகியை ஒட்டியும் மோடி தனது வாழ்த்துகளை வெளியிட்டுள்ளார். அவர், ‘இந்த மங்களகரமான விழா, எல்லோரின் வாழ்விலும் மகிழ்ச்சியையும், செழுமையையும் கொண்டு வரட்டும். இந்த விழா, இயற்கைக்கும், கடினமான உழைக்கும் நமது விவசாயிகளுக்கும் இடையே ஒரு சிறப்பு இணைப்பை ஏற்படுத்துகிறது. நமது நிலங்கள் வளம் கொழிக்கட்டும், இந்த உலகைக் காக்க நமக்கு உந்துதலாக அமையட்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

சிந்தி பண்டிகை
சிந்தி மக்களால் கொண்டாடப்படும் சேத்தி சந்த் பண்டிகையை ஒட்டி பிரதமர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘சிந்தி இன மக்களுக்கு சேத்தி சந்த் பண்டிகை வாழ்த்துகள். கடவுள் ஜூலேலாலின் சிறப்பு ஆசீர்வாதங்கள் எப்போதும் நம்முடன் இருக்கும். வரும் ஆண்டில் எல்லோரது விருப்பங்களும் நிறைவேற நான் பிரார்த்திக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.நவ்ரே, நவ் சம்வத்சர் மற்றும் சஜிபு செய்ராபா ஆகிய பண்டிகைகளை ஒட்டியும் பிரதமர் மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.பண்டிகைகள் நம் நாட்டின் பன்முகத் தன்மையைக் காட்டுகின்றன, ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்ற உணர்வை 
வெளிப்படுத்துகின்றன என்று அவர் கூறியுள்ளார்.

Next Story