தேசிய செய்திகள்

உத்தரபிரதேசத்தில் நேற்று ஒரேநாளில் 18,021 பேருக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + Uttar Pradesh Records Highest Ever Daily Spike Of Coronavirus Cases

உத்தரபிரதேசத்தில் நேற்று ஒரேநாளில் 18,021 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

உத்தரபிரதேசத்தில் நேற்று ஒரேநாளில் 18,021 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
உத்தரபிரதேச மாநிலத்தில் நேற்று ஒரேநாளில் 18 ஆயிரத்து 21 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
லக்னோ,

இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை தீவிரமடைந்து வருகிறது. மகாராஷ்டிரா, டெல்லி, உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் புதிய உச்சம் அடைந்து வருகிறது.

இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தில் நேற்று ஒரேநாளில் 18 ஆயிரத்து 21 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதான் அம்மாநிலத்தில் பதிவாகியுள்ள அதிகபட்ச ஒருநாள் பாதிப்பாகும். இதனால், உத்தரபிரதேசத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 23 ஆயிரத்து 582 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 95 ஆயிரத்து 980 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிப்பில் இருந்து நேற்று 3 ஆயிரத்து 474 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், அம்மாநிலத்தில்க் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 18 ஆயிரத்து 293 ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு உத்தரபிரதேசத்தில் நேற்று 85 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், அம்மாநிலத்தில் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9 ஆயிரத்து 309 ஆக அதிகரித்துள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

1. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா-வை காணவில்லை என்று டெல்லி போலீசில் புகார்
மக்களை கவனித்துக்கொள்ள அரசாங்கம் தேவைப்படும்போது அதில் மிகவும் முக்கியப்பொறுப்பில் உள்ள நபர் தனது பொறுப்பு மற்றும் வேலையில் இருந்து காணவில்லை என்று புகார் கொடுத்த நபர் தெரிவித்துள்ளார்.
2. கேரளாவுக்கு உடனடியாக 300 மெட்ரிக் டன் ஆக்சிஜன் அனுப்புங்கள் - பிரதமர் மோடிக்கு பினராயி விஜயன் கடிதம்
கேரளாவுக்கு உடனடியாக 300 மெட்ரிக் டன் ஆக்சிஜன் அனுப்பும் படி பிரதமர் மோடிக்கு முதல்மந்திரி பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.
3. மந்திரிகளின் ஓராண்டு சம்பளத்தை கொரோனா நிவாரண நிதிக்கு நன்கொடையாக வழங்க கர்நாடக அரசு உத்தரவு
கர்நாடக அமைச்சரவை இடம்பெற்றுள்ள மந்திரிகளின் ஓராண்டு சம்பளம் முழுவதையும் கொரோனா நிவாரண நிதிக்கு நன்கொடையாக வழங்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
4. தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள் அல்லது தடுப்பூசி செலுத்தும் வரை முகக்கவசம் அணியுங்கள் - ஜோ பைடன்
விதிமுறைகள் இப்போது மிகவும் எளிதானவை... கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள் அல்லது தடுப்பூசி செலுத்தும் வரை முகக்கவசம் அணியுங்கள் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
5. கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்திக்கொண்டவர்கள் முகக்கவசம் அணிய தேவையில்லை - அமெரிக்கா அறிவிப்பு
அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்திக்கொண்டவர்கள் பெரும்பாலான இடங்களில் முகக்கவசம் அணிய கட்டாய தேவையில்லை என்று அந்நாட்டு நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அறிவித்துள்ளது.