தேசிய செய்திகள்

மும்பையில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா; இன்று 9,925 பேருக்கு தொற்று உறுதி + "||" + Corona on the rise in Mumbai; Today 9,925 people are confirmed infected

மும்பையில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா; இன்று 9,925 பேருக்கு தொற்று உறுதி

மும்பையில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா; இன்று 9,925 பேருக்கு தொற்று உறுதி
மராட்டிய மாநிலத்தின் தலைநகர் மும்பையில் இன்று ஒரே நாளில் 9,925 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை,

மராட்டிய மாநிலத்தில் கொரோனா தொற்றின் 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அங்கு இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாட்களில் ஊரடங்கு என பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும் அங்கு நாளுக்கு தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில் மராட்டிய மாநிலத்தின் தலைநகர் மும்பையில், இன்று ஒரே நாளில் 9,925 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மும்பையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,44,942 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 54 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததையடுத்து, மும்பையில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,140 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 9,273 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

இதன் மூலம் மும்பையில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,44,214 ஆக அதிகரித்துள்ளது. மும்பை மாநகரம் முழுவதும் தற்போது 87,443 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15.95 கோடியாக உயர்வு
உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 13.82 கோடியாக அதிகரித்துள்ளது.
2. உத்தரபிரதேசம்: கிராமங்களில் கொரோனா பரவுவதை தடுக்க வேண்டும் - மாயாவதி வலியுறுத்தல்
உத்தரபிரதேச மாநிலத்தின் கிராமங்களில் கொரோனா பரவுவதை தடுக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் மாயாவதி வலியுறுத்தி உள்ளார்.
3. தேசம் மூச்சுவிட திணறும்போது மாற்று யதார்த்தம் குறித்து பேசுகிறார்; மத்திய மந்திரி மீது சசி தரூர் குற்றச்சாட்டு
இந்தியா கொரோனா வைரசின் பிடியில் சிக்கி, மூச்சு விட திணறும்போது, மாற்று யதார்த்தம் குறித்து மத்திய மந்திரி ஹர்ஷவர்தன் பேசுவதாக காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் சாடியுள்ளார்.
4. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15.89 கோடியாக உயர்வு
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15.89 கோடியாக உயர்ந்துள்ளது.
5. மும்பையில் ரூ.21 கோடி யுரேனியம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: என்.ஐ.ஏ.வுக்கு மாற்றம்
ரூ.21 கோடி இயற்கை யுரேனியம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டுள்ளது.

அதிகம் வாசிக்கப்பட்டவை