கொரோனா இரண்டாவது அலை சிக்கி தவிக்கும் பீகார் மாநிலம்


Image courtesy :indianexpress.com
x
Image courtesy :indianexpress.com
தினத்தந்தி 15 April 2021 6:53 AM GMT (Updated: 15 April 2021 6:53 AM GMT)

கொரோனா இரண்டாவது அலையில் பீகார் மாநிலம் சிக்கி தவித்து வருகிறது.

பாட்னா

பீகார் மாநிலத்தில் கடந்த பதினைந்து நாட்களில் 21,000 க்கும் மேற்பட்ட கொரோனா  பாதிப்புகள் கண்டறியப்பட்டதன் மூலம் மாநிலத்தின் சுகாதார அமைப்பு கடுமையான சவால்களை எதிர்கொண்டுவருகிறது. பாட்னாவில் மட்டும் 7,500 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்து உள்ளது. கயா, பாகல்பூர் மற்றும் முசாபர்பூர் ஆகியவை இரண்டாவது அலையில் மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாகும்.

சுமார் 20 அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள்  படுக்கைகள் ஏற்கனவே நிரம்பியுள்ளன. எய்ம்ஸ், பாட்னா இயக்குனர் பி.கே.சிங் கூறும் போது நாங்கள் படுக்கைகளை அதிகரித்து வருகிறோம், ஆனால் அது போதாது. குறிப்பிடப்பட்ட நோய்களுக்கு  இடமளிப்பது மிகவும் கடினம் என கூறினார்.

பீகாரில் நேற்று  4,157  பாதிப்புகள் கண்டறியப்பட்டது. இது ஒரு நாளில் மிக உச்சம் ஆகும் . பாட்னாவில் 7,557 உட்பட 20,148  பேர் சிகிச்சையில் உள்ளனர். 

Next Story