கேரளாவில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை - 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்துவதில் சிக்கல்


கேரளாவில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை - 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்துவதில் சிக்கல்
x
தினத்தந்தி 15 April 2021 8:55 AM GMT (Updated: 15 April 2021 8:55 AM GMT)

கேரளாவில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக பல பகுதிகளில் 2-வது டோஸ் தடுப்பூசியை செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

திருவனந்தபுரம், 

இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனாவின் 2-வது அலையை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளுடன், தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் தினந்தோறும் லட்சக்கணக்கான பயனாளர்கள் தடுப்பூசி போட்டு வருகின்றனர். இவ்வாறு வேகமாக நடந்து வரும் பணிகள் காரணமாக இதுவரை போடப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 11 கோடியை கடந்து விட்டது.

இந்நிலையில் கேரளாவில் கொரோனா பரவலுக்கு மத்தியில் 45 வயதுக்கு மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதனால் மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எர்ணாகுளம், திருவனந்தபுரம் உட்பட 5 மாவட்டங்களில் கோவிஷீல்ட் மருந்து காலியாகி விட்டது. இதனால் முகாம்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. 

இதற்கிடையே மத்திய அரசு 2 லட்சம் டோஸ்களை வழங்கியுள்ளது. இந்த மருந்துகள் முகாம்களுக்கு உடனடியாக வந்து சேருமா என்ற குழப்பம் நிலவுகிறது. இதற்கிடையே  திருவனந்தபுரத்தில் தனியார் மருத்துவமனைகளிலும், கிராமப்புற மருத்துவமனைகளிலும் செவ்வாய் கிழமையே தடுப்பூசிகள் காலியாகிவிட்டது. இதனால் 2-வது டோசுக்காக வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டது.  

Next Story