மேற்கு வங்காளத்தில் மோடி, அமித்ஷா பிரசாரம் செய்ய தடை விதிக்க வேண்டும்; தேர்தல் ஆணையத்திடம் திரிணாமுல் காங்கிரஸ் மனு


மேற்கு வங்காளத்தில் மோடி, அமித்ஷா பிரசாரம் செய்ய தடை விதிக்க வேண்டும்; தேர்தல் ஆணையத்திடம் திரிணாமுல் காங்கிரஸ் மனு
x
தினத்தந்தி 15 April 2021 1:57 PM GMT (Updated: 15 April 2021 1:57 PM GMT)

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் டெல்லியில் தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தனர்.

அதில் கூறியிருப்பதாவது:-

மேற்கு வங்காளத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டதை அடுத்து, அங்கு அரசியல் கட்சி தலைவர்கள் செல்லக்கூடாது என தேர்தல் ஆணையம் விதித்த தடையை கடுமையாக கண்டிக்கிறோம். இதுபோன்ற செயல்பாடுகள், ஒருவரின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகும். தேர்தல் ஆணையம் என்பது அரசியலமைப்பு சட்டத்தின்படி சுதந்திரமாக செயல்பட வேண்டும். ஆனால் இந்த தேர்தலில் பா.ஜ.க.வின் கட்டளைப்படிதான் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது.

இரு சமூகத்துக்கு மம்தா பானர்ஜி ஏதும் செய்யவில்லை என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டினார். மதரீதியான, சமூகத்தை குறிப்பிட்டு மோடி பேசியது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படியும், தேர்தல் நடத்தை விதிகளின்படியும் விதிமீறலாகும். ஆதலால், மேற்கு வங்காளத்தில் தேர்தல் பிரசாரம் செய்ய மோடி, அமித்ஷாவுக்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story