தேசிய செய்திகள்

ஆந்திராவில் முன்பகையால் விபரீதம்: குழந்தைகள் உள்பட 6 பேர் வெட்டிக்கொலை + "||" + Six including an infant hacked to death in Andhra Pradesh

ஆந்திராவில் முன்பகையால் விபரீதம்: குழந்தைகள் உள்பட 6 பேர் வெட்டிக்கொலை

ஆந்திராவில் முன்பகையால் விபரீதம்: குழந்தைகள் உள்பட 6 பேர் வெட்டிக்கொலை
முன்பகை காரணமாகவே இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளதாக போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் ஜூட்டாடா கிராமத்தை சேர்ந்த ராமாராவ் என்பவர் நேற்று முன்தினம் இரவு தன்னுடைய வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். ராமாராவ் வீட்டருகே உள்ள அப்புல்ராவ் என்பவர் நேற்று அதிகாலை நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்து ராமாராவின் மனைவி உஷா, 2 மாத குழந்தை நிஷா, 2 வயது மகன் உதய் உள்ளிட்ட 6 பேரை கொடூரமாக வெட்டிக்கொலை செய்தார்.

அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், ராமாராவ் வீட்டில் ரத்த வெள்ளத்தில் 6 பேர் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அங்கு விரைந்து வந்த போலீசார், கொலையாளி அப்புல்ராவை கைது செய்து இந்த கொடூர கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்பகை காரணமாகவே இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளதாக போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. பச்சிளம் குழந்தை எனவும் பாராமல் வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


தொடர்புடைய செய்திகள்

1. ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,546-பேருக்கு கொரோனா
ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,546- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட்டுள்ளது.
2. அந்திராவில் இன்று 2,068 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு
ஆந்திராவில் 21,198 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. செங்குன்றம் அருகே ரவுடி சரமாரியாக வெட்டிக்கொலை 2 பேர் போலீசில் சரண்
செங்குன்றம் அருகே ரவுடி சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 2 பேர் போலீசில் சரண் அடைந்தனர்.
4. காஞ்சீபுரத்தில் வீட்டுக்குள் வெடிகுண்டு வீசி ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை
காஞ்சீபுரத்தில் மர்ம நபர்கள் வீட்டுக்குள் நாட்டு வெடிகுண்டு வீசி ஆட்டோ டிைரவரை வெட்டிக்கொன்று விட்டு தப்பிச் சென்றனர்.
5. வீட்டுக்குள் வெடிகுண்டு வீசி ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை தம்பிக்கு வைத்த குறியில் அண்ணன் கொல்லப்பட்டார்
காஞ்சீபுரத்தில் மர்ம நபர்கள் வீட்டுக்குள் நாட்டு வெடிகுண்டு வீசி ஆட்டோ டிரைவரை வெட்டிக்கொன்று விட்டு தப்பிச் சென்றனர்.