இந்தியாவில் இதுவரை போடப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 11.72 கோடியை தாண்டியது


இந்தியாவில் இதுவரை போடப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 11.72 கோடியை தாண்டியது
x
தினத்தந்தி 16 April 2021 6:18 PM GMT (Updated: 16 April 2021 6:18 PM GMT)

இந்தியாவில் கொரோனா பரவல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது.

புதுடெல்லி,

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2-வது அலை சுனாமியாய் சுழன்றடிக்கிறது. இந்த பேரிடரில் இருந்து மக்களை காக்கும் ஆயுதமாய் தடுப்பூசியை மத்திய-மாநில அரசுகள் பயன்படுத்தி வருகின்றன.

எனவே போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் நாளொன்றுக்கு லட்சக்கணக்கான பயனாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகின்றன. இதன் மூலம் இந்தியாவில் இதுவரை போடப்பட்ட டோஸ்களின் எண்ணிக்கை 11.72 கோடியாக அதிகரித்து இருக்கிறது. 

 காலை 7 மணி நிலவரப்படி 11 கோடியே 72 லட்சத்து 23 ஆயிரத்து 503 டோஸ்கள் போடப்பட்டு இருக்கின்றன. இந்தியாவில் தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்பட்ட 90-வது நாளான நேற்று மட்டும் 27 லட்சத்து 30 ஆயிரத்து 359 பயனாளிகள் தடுப்பூசி போட்டுள்ளனர். இதில் 21,70,144 பயனாளிகள் முதல் டோசும், 5,60,215 பேர் 2-வது டோசும் போட்டுள்ளனர்.

இந்தியாவில் இதுவரை போடப்பட்ட தடுப்பூசி டோஸ்களில் 59.63 சதவீதம் 8 மாநிலங்களில் போடப்பட்டு இருக்கின்றன. இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.

Next Story