டெல்லியில் ஆக்சிஜன், மருந்து, படுக்கைகள் பற்றாக்குறை; முதல் மந்திரி வேதனை


டெல்லியில் ஆக்சிஜன், மருந்து, படுக்கைகள் பற்றாக்குறை; முதல் மந்திரி வேதனை
x
தினத்தந்தி 17 April 2021 12:08 PM GMT (Updated: 17 April 2021 12:08 PM GMT)

டெல்லியில் ஆக்சிஜன், மருந்துகள் மற்றும் படுக்கைகள் பற்றாக்குறையாக உள்ளன என முதல் மந்திரி கெஜ்ரிவால் வேதனை தெரிவித்து உள்ளார்.

புதுடெல்லி,

டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் இன்று பேசும்பொழுது, டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் 24 ஆயிரம் கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.  அதுபற்றிய விவரம் பின்னர் வெளிவரும்.

டெல்லியில் ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவிர் மருந்துகள் பற்றாக்குறையாக இருக்கின்றன.  ஐ.சி.யூ. படுக்கைகள் குறைந்த எண்ணிக்கையில் உள்ளன.  ஆக்சிஜன் மற்றும் ஐ.சி.யூ. படுக்கைகள் குறைந்து வருகின்றன என்று வேதனை தெரிவித்து உள்ளார்.

நாங்கள் படுக்கை வசதிகளை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.  இன்னும் 2 அல்லது 3 நாட்களில் 6 ஆயிரம் படுக்கைகளை தயார் செய்து விடுவோம்.  கொரோனா பாதிப்பு எப்பொழுது உச்சம் அடையும் என யாருக்கும் தெரியாது.  கடந்த நவம்பரில் 4,100 படுக்கைகளை மத்திய அரசு அளித்தது.

ஆனால், 1,800 படுக்கைகளையே தற்பொழுது வழங்கியுள்ளது.  மத்திய மந்திரி டாக்டர் ஹர்சவர்தனிடம் கொரோனா நோயாளிகளுக்காக 50% படுக்கைகளை ஒதுக்க வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளேன்.  உங்களது வாழ்வை காக்க என்ன தேவையோ அந்த நடவடிக்கைகளை நாங்கள் எடுப்போம் என்று கூறியுள்ளார்.

Next Story