பெங்களூருவில் கஞ்சா விற்ற தமிழகத்தை சேர்ந்த 2 பேர் கைது; ரூ.54 லட்சம் கஞ்சா பறிமுதல்


பெங்களூருவில் கஞ்சா விற்ற தமிழகத்தை சேர்ந்த 2 பேர் கைது; ரூ.54 லட்சம் கஞ்சா பறிமுதல்
x
தினத்தந்தி 17 April 2021 8:40 PM GMT (Updated: 17 April 2021 8:40 PM GMT)

கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெங்களூரு: பெங்களூரு உளிமாவு போலீசார் தங்களுக்கு கிடைத்த தகவலின்பேரில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 2 பேரை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் தமிழ்நாடு கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனபள்ளி தாலுகா நேரலகெரே கிராமத்தை சேர்ந்த ராதாரவி என்கிற ரவி (வயது 29), பழனிவேலு என்கிற பழனி (38) என்பது தெரியவந்தது.

 இவர்களில் ராதாரவி கட்டிட தொழிலாளி ஆவார். பழனிவேலு விவசாயம் செய்து வருகிறார். விவசாயம், கட்டிட தொழிலில் போதிய லாபம் கிடைக்காததால் 2 பேரும் கஞ்சா விற்பனை செய்ய முடிவு செய்து உள்ளனர்.
அவர்களுக்கு ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்த சோமேஷ் என்பவரின் பழக்கம் கிடைத்து உள்ளது. 

அவர் மூலம் ஆந்திராவில் இருந்து ஒரு கிலோ கஞ்சாவை ரூ.25 ஆயிரத்திற்கு வாங்கி வந்து, அதை பெங்களூரு பன்னரக்கட்டா, ஓசூர், எலெக்ட்ரானிக் சிட்டி, ஆனேக்கல், அத்திபெலே ஆகிய பகுதிகளில் 2 பேரும் ரூ.45 ஆயிரத்திற்கு விற்பனை செய்து வந்து உள்ளனர். கைதானவர்கள் கொடுத்த தகவலின்பேரில் ரூ.54 லட்சம் மதிப்பிலான 120 கிலோ 750 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான 2 பேர் மீதும் உளிமாவு போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

Next Story