தகுதிவாய்ந்த ஒவ்வொரு குடிமகனுக்கும் வங்கிக்கணக்கில் ரூ.6 ஆயிரம் செலுத்த வேண்டும்: சோனியா காந்தி வலியுறுத்தல்


Photo Credit: ANI
x
Photo Credit: ANI
தினத்தந்தி 17 April 2021 10:13 PM GMT (Updated: 17 April 2021 10:35 PM GMT)

25-வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும் என மத்திய அரசுக்கு சோனியா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதுடெல்லி, 

கொரோன வைரஸ் தொற்று நாடு முழுவதும் மின்னல் வேகத்தில் பரவி  வரும் நிலையில், தொற்று பரவும் சூழலை சரியாக கையாளவில்லை என்று காங்கிரஸ் மத்திய அரசை சாடி வருகிறது. அதேபோல், கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளையும் பொது வெளியில் கூறி வருகிறது. 

இந்த நிலையில், நாட்டில் கொரோனா நிலவரம் குறித்தும், எடுக்கப்பட வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் காங்கிரஸ் காரியக் குழு  நேற்று ஆலோசனை நடத்தியது. கட்சியின் தலைவா் சோனியா காந்தி தலைமையில் காணொலி வழியில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் சோனியா காந்தி கூறுகையில், “ 

கொரோனா தடுப்பூசி ஏற்றுமதியை தடைசெய்ய வேண்டியதில்லை என்றபோதும், தடுப்பூசி வழங்குவதில் நாட்டின் குடிமக்களுக்கே முன்னுரிமை அளிக்கவேண்டும். மேலும், கொரோனா சிகிச்சையிலும், நிவாரணம் வழங்குவதிலும் குறிப்பிட்ட சில மாநிலங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து புகாா்கள் தெரிவிக்கப்பட்டபோதும், மத்திய அரசு தொடா்ந்து அமைதி காத்து வருகிறது.

மேலும் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்படுவதை மத்திய அரசு மறுபரிசீலனை செய்யவேண்டும்.  25-வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட அனுமதி அளிக்க வேண்டும். தொற்று பரவலால் தற்போது மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. 

இதனால்  பொருளாதார ரீதியில் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, தகுதியுள்ள ஒவ்வொரு குடிமக்களுக்கும் மாத வருவாயை உறுதிப்படுத்தும் வகையில், நேரடியாக அவா்களுடைய வங்கிக் கணக்குக்கே மத்திய அரசு மாதம் ரூ. 6,000 நிதியை செலுத்த வேண்டும்” என்றார். 


Next Story