தேசிய செய்திகள்

கேரளாவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு: இன்று ஒரேநாளில் 18,257 பேருக்கு தொற்று உறுதி + "||" + Kerala reports 18,257 new COVID19 cases, 4565 recoveries, and 25 deaths

கேரளாவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு: இன்று ஒரேநாளில் 18,257 பேருக்கு தொற்று உறுதி

கேரளாவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு: இன்று ஒரேநாளில் 18,257 பேருக்கு தொற்று உறுதி
கேரளாவில் இன்று ஒரேநாளில் 18,257 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,

கேரளாவில் இன்று கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக தகவல்களை அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, கேரளாவில் புதிய உச்சமாக இன்று ஒரேநாளில் 18 ஆயிரத்து 257 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அம்மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 12 லட்சத்து 39 ஆயிரத்து 424 ஆக அதிகரித்துள்ளது. 

வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 93 ஆயிரத்து 686 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சைக்கு பின் இன்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 565 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், மாநிலத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 11 லட்சத்து 40 ஆயிரத்து 486 ஆக அதிகரித்துள்ளது.

ஆனால், வைரஸ் தாக்குதலுக்கு அம்மாநிலத்தில் இன்று மேலும் 25 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கேரளாவில் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 929 ஆக அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பரவல் அதிகரிப்பு: கேரளாவில் இன்று முதல் கட்டுப்பாடுகள் என்ன?
கேரளாவில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்து இன்று முதல் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
2. கேரளாவில், கைவசம் இருந்த ஒரு தொகுதியையும் இழந்த பா.ஜனதா; ‘மெட்ரோமேன்’ ஸ்ரீதரன், நடிகர் சுரேஷ் கோபி போராடி தோல்வி
கேரளாவில், தனது கைவசம் இருந்த ஒரு தொகுதியையும் பா.ஜனதா இழந்தது. மெட்ரோமேன் ஸ்ரீதரன், நடிகர் சுரேஷ் கோபி ஆகியோர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியபோதிலும், இறுதியில் தோல்வி அடைந்தனர்.
3. கேரளாவில் 6 நாட்கள் ஊரடங்கு - முதல்-மந்திரி பினராயி விஜயன் தகவல்
கேரளாவில் வரும் 4-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறியுள்ளார்.
4. கேரளாவில் முழு ஊரடங்கு தேவையில்லை: கேரள மந்திரி சபை தீர்மானம்
கேரளாவில் 1 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி மருந்துகளை வாங்க மந்திரி சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
5. கேரளாவில் ஓட்டு எண்ணிக்கையன்று முழு ஊரடங்கு தேவை இல்லை - கேரளா ஐகோர்ட்டு உத்தரவு
அரசும், தேர்தல் ஆணையமும் எடுத்துள்ள தொற்று கட்டுப்பாடு நடவடிக்கைகள் திருப்தியாக உள்ளதால், ஓட்டுஎண்ணிக்கையன்று( ேம 2-ந் தேதி) கேரளாவில் முழு ஊரடங்கு அமல்படுத்த தேவை இல்லை என ஐகோா்ட்டு உத்தரவிட்டுள்ளது.