பெங்களூருவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என மக்கள் பீதி அடைய வேண்டாம்; போலீஸ் கமிஷனர் கமல்பந்த்


பெங்களூருவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என மக்கள் பீதி அடைய வேண்டாம்; போலீஸ் கமிஷனர் கமல்பந்த்
x
தினத்தந்தி 18 April 2021 3:47 PM GMT (Updated: 18 April 2021 3:47 PM GMT)

பெங்களூருவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என மக்கள் பீதி அடைய வேண்டாம் என்று போலீஸ் கமிஷனர் கமல்பந்த் தெரிவித்துள்ளார்.

மக்களுடன் உரையாடல்

பெங்களூரு போலீஸ் கமிஷனர் கமல்பந்த், பொதுமக்களிடம் முகநூல் மூலமாக உரையாடினார். அப்போது பொதுமக்கள் கூறிய குறைகளை அவர் கேட்டு அறிந்து கொண்டார். அப்போது போலீசாருக்கு எதிராக பொதுமக்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினார்கள். அந்த சந்தர்ப்பத்தில் ஒரு நபர், தடை செய்யப்பட்டுள்ள இடத்தில் நிறுத்தப்படும் வாகனங்களை தூக்கி செல்லும் ஊழியர்கள் விதிமுறைகளை மீறுவதாக போலீஸ் கமிஷனர் கமல்பந்திடம் குற்றச்சாட்டு கூறினார்.

உடனே கமல்பந்த் கூறுகையில், தடை செய்யப்பட்ட இடங்களில் நிறுத்தப்படும் வாகனங்களை டோயிங் செய்யும் ஊழியர்கள் ஒலி பெருக்கி மூலமாக சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகளை அழைக்க வேண்டும். மேலும் வீடியோவும் எடுக்க வேண்டும். இந்த விதிமுறைகளை டோயிங் ஊழியர்கள் மீறினால், அதுபற்றி சம்பந்தப்பட்ட பொதுமக்கள் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கலாம். அதன்பேரில், நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் முகநூல் மூலமாக போலீஸ் கமிஷனர் கமல்பந்த் பேசியதாவது:-

பீதி அடைய வேண்டாம்

பெங்களூருவில் கொரோனா பரவல் காரணமாக இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் எக்காரணத்தை கொண்டும் விதிமுறைகளை மீறக்கூடாது. இரவு நேர ஊரடங்கின் போது தேவையில்லாமல் மக்கள் சுற்றி திரிய வேண்டாம். கொரோனா பரவலை தடுக்க முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது கட்டாயமாகும். பெங்களூருவில் கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என மக்கள் பீதி அடைய வேண்டாம்.

பெங்களூருவில் வயதானவர்கள், பெண்கள், குழந்தைகளுக்கு போலீசார் முழு பாதுகாப்பு அளித்து வருகின்றனர். இதற்காக 200 ஒய்சாலா வாகனங்கள் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. பெண்கள், குழந்தைகளுக்கு ஏதாவது பிரச்சினை என்றால், 112 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டால் 24 மணிநேரமும் போலீசார் தேவையான உதவிகளையும், பாதுகாப்பையும் அளிப்பார்கள். போதைப்பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வ ருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story