தேசிய செய்திகள்

மராட்டியத்தில் 70 ஆயிரத்தை நெருங்கிய ஒருநாள் கொரோனா பாதிப்பு + "||" + Maharashtra reports 68,631 fresh COVID cases, 45,654 discharges, and 503 deaths in the last 24 hours

மராட்டியத்தில் 70 ஆயிரத்தை நெருங்கிய ஒருநாள் கொரோனா பாதிப்பு

மராட்டியத்தில் 70 ஆயிரத்தை நெருங்கிய ஒருநாள் கொரோனா பாதிப்பு
மராட்டியத்தில் இன்று மேலும் 68,631 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை,

மராட்டியத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், மராட்டிய மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மாநிலம் முழுவதும் இன்று மேலும் 68,631 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 38,39,338 ஆக அதிகரித்துள்ளது.

மாநிலத்தில் இன்று ஒரேநாளில் மேலும் 503 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60,473 ஆக அதிகரித்துள்ளது.

மராட்டியத்தில் இன்று ஒரேநாளில் அதிகபட்சமாக 45,654 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 31,06,828 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை மாநிலத்தில் 6,70,388 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மும்பையில் தொடர்ந்து குறைகிறது கொரோனா தொற்று
மும்பையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. புதிதாக 1,544 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
2. அசாமில் மேலும் 3,650- பேருக்கு கொரோனா தொற்று
அசாமில் கடந்த 24 மணி நேரத்தில் 3,650- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. மராட்டியத்தில் இன்று மேலும் 34,389 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மராட்டியத்தில் இன்று மேலும் 34,389பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. கொரோனாவுக்கு அச்சப்படுங்கள்... சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின்
கொரோனாவால் 4 குழந்தைகள் உள்பட குடும்பத்தில் 10 பேர் பாதித்த நிலையில், கொரோனாவுக்கு அச்சப்படுங்கள் என கிரிக்கெட் வீரர் அஸ்வின் தெரிவித்து உள்ளார்.
5. ஆந்திராவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு: இன்று மேலும் 24,171 பேருக்கு தொற்று உறுதி
ஆந்திர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.