மேற்குவங்காளம்: பாஜக பிரசார அலுவலகம் மீது குண்டு வீச்சு


மேற்குவங்காளம்: பாஜக பிரசார அலுவலகம் மீது குண்டு வீச்சு
x
தினத்தந்தி 19 April 2021 4:15 AM GMT (Updated: 19 April 2021 4:15 AM GMT)

மேற்குவங்காளத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பாஜக கட்சியின் பிரசார அலுவலகம் மீது குண்டு வீச்சு தாக்குதல் நடைபெற்றுள்ளது.

கொல்கத்தா,

294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்காள சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றுள்ளது. எஞ்சிய 3 கட்டங்களும் முறையே ஏப்ரல் 22, 26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

இத்தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ் கூட்டணிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது. அடுத்தகட்ட தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

பிரசாரத்தின் போது கட்சிகளுக்கு இடையே மோதல்களும் அரங்கேறி வருகிறது. இதன் காரணமாக அவ்வப்போது கட்சி அலுவலகங்கள், கட்சி உறுப்பினர்கள் மீது அவ்வப்போது தாக்குதல் நடைபெறுகிறது.

இந்நிலையில், அம்மாநிலத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டம் பானிஹடி தொகுதியில் உள்ள பாஜக கட்சி பிரசார அலுவலகம் மீது நேற்று இரவு குண்டு வீச்சு தாக்குதல் நடைபெற்றுள்ளது.

கட்சி பிரசார அலுவலகம் மட்டுமின்றி பாஜக கட்சி தொண்டர்களின் வீடுகளை குறிவைத்தும் குண்டுவீச்சி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. 

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரே இந்த தாக்குதலுக்கு காரணம் என பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது. இந்த தாக்குதல் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story