கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: பிரதமர் மோடி இன்று காலை 11.30 மணிக்கு அவசர ஆலோசனை


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 19 April 2021 5:47 AM GMT (Updated: 19 April 2021 5:58 AM GMT)

நாட்டில் கொரோனா பாதிப்பு மிக கடுமையாக அதிகரித்துள்ளநிலையில் பிரதமர் மோடி இன்று காலை 11.30 மணிக்கு அவசர ஆலோசனை நடத்த உள்ளார்.

புதுடெல்லி, 

கொரோனா வைரஸ் இந்தியாவில் ஒவ்வொரு நாளும் புதிய உச்சம் காண்கிற வகையில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. 

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,73,810 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,50,61,919 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 1,619 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,78,769 ஆக உயர்ந்துள்ளது. 

இதனைத்தொடர்ந்து நாளை முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலுக்கு வரும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 11.30 மணிக்கு நடைபெற உள்ள அவசர ஆலோசனை கூட்டத்திற்கு தலைமை தாங்குவார் என்றும், இந்த ஆலோசனைக்கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

Next Story