தேசிய செய்திகள்

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய வருகை மீண்டும் ரத்து + "||" + UK PM Johnson calls off visit to India over Covid-19 situation

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய வருகை மீண்டும் ரத்து

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய வருகை மீண்டும் ரத்து
கொரோனா பரவல் காரணமாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய வருகை மீண்டும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
புதுடெல்லி

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், கடந்த ஜனவரி மாதம் இந்தியா வருவதாக இருந்தது. இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இருந்தார். ஆனால், இங்கிலாந்தில் கொரோனா பரவல் திடீரென அதிகரித்ததால், அவரது வருகை ரத்தானது.

இந்தநிலையில், போரிஸ் ஜான்சன் இந்த மாத (ஏப்ரல்) இறுதியில் இந்தியாவுக்கு வருகை தர திட்டமிடப்பட்டது. தற்போது இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையில் பாதிப்பு அதிகரித்து வருவதால் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய வருகை 2-வது முறையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. 

இந்தியாவில் தற்போதைய கொரோனா வைரஸ் நிலைமை காரணமாக, அடுத்த வாரம் நடக்கவிருந்த இந்தியாவுக்கான திட்டமிட்ட பயணத்தை இங்கிலாந்து  பிரதமர் போரிஸ் ஜான்சன் திங்கள்கிழமை ரத்து செய்தார் என்று ஜான்சன் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தற்போதைய கொரோனா வைரஸ் சூழ்நிலை காரணமாக பிரதமர் போரிஸ் ஜான்சன் அடுத்த வாரம் இந்தியா செல்ல முடியாது" என்று ஜான்சன் அலுவலகம் வெளியிட்ட இங்கிலாந்து மற்றும் இந்திய அரசாங்கத்தின் கூட்டு அறிக்கை தெரிவித்துள்ளது.

நிலைமையைக் கருத்தில் கொண்டு, இங்கிலாந்து பிரதமர் அடுத்த வாரம் இந்தியாவுக்கு வரமாட்டார் என்று பரஸ்பர ஒப்பந்தத்தின் மூலம் முடிவு செய்யப்பட்டுள்ளது. இரு தரப்பினரும் ஒரு மெய்நிகர் கூட்டத்தை நடத்தவுள்ளனர்  என்று வெளியுறவுத்துறை  ஒரு அறிக்கையில் தெரிவித்து உள்ளது. தொடர்புடைய செய்திகள்

1. பீகார்: கங்கை நதியில் மிதந்து வந்த 71 உடல்கள்: கொரோனாவால் உயிரிழந்தவர்களா?
பீகாரில் கங்கை நதியில் நதியில் மிதந்து வந்த பல உடல்கள் உரிய மரியாதையுடன் புதைக்கப்பட்டன
2. உருமாறும் கொரோனாவால் தடுப்பூசிகளும் செயலிழக்கும் அபாயம் : உலக சுகாதார நிறுவனம்
உருமாறும் கொரோனாவால் தடுப்பூசிகளும் செயலிழக்கும் அபாயம் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்து உள்ளது.
3. அதிகரிக்கும் கொரோனா: தெலங்கானாவில் நாளை முதல் 10 நாட்களுக்கு ஊரடங்கு!
அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால் தெலங்கானாவில் நாளை முதல் 10 நாட்களுக்கு ஊரடங்கு விதிக்கப்பட்டு உள்ளது
4. கொரோனா பாதிப்பு: டுவிட்டர் இந்தியாவுக்கு ரூ. 110 கோடி நிதியுதவி
கொரோனா தடுப்புப் பணிகளுக்கு உலகம் முழுவதும் உள்ள பல அமைப்புகள், நிறுவனங்கள், தன்னார்வலர்கள் நிதியுதவி அளித்து வருகின்றன.
5. இந்தியாவில் பரவிவரும் உருமாற்ற கொரோனா வைரஸ் கவலையளிக்கிறது- உலக சுகாதார அமைப்பு
இந்தியாவில் பரவிவரும் பி-1617 வகை உருமாற்ற கொரோனா வைரஸ் கவலையளிப்பதாக இருக்கிறது என உலக சுகாதார அமைப்பு வேதனை தெரிவித்துள்ளது.