தேசிய செய்திகள்

புதிய விதிமுறைகளுடன் இந்த ஆண்டு ஹஜ் புனித யாத்திரைக்கு அனுமதி; 2-வது டோஸ் கொரோனா தடுப்பூசியும் அவசியம் + "||" + Permission for Hajj pilgrimage this year with new rules; A 2nd dose of corona vaccine is also required

புதிய விதிமுறைகளுடன் இந்த ஆண்டு ஹஜ் புனித யாத்திரைக்கு அனுமதி; 2-வது டோஸ் கொரோனா தடுப்பூசியும் அவசியம்

புதிய விதிமுறைகளுடன் இந்த ஆண்டு ஹஜ் புனித யாத்திரைக்கு அனுமதி; 2-வது டோஸ் கொரோனா தடுப்பூசியும் அவசியம்
முஸ்லிம்களுக்கு புதிய விதிமுறைகளுடன் இந்த ஆண்டு ஹஜ் புனித யாத்திரைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்காக செல்பவர்கள், கொரோனா தடுப்புக்கான 2-வது ஊசியும் செலுத்தி கொள்வது அவசியமாக்கப்பட்டு உள்ளது.

ஹஜ் புனித யாத்திரை

சவுதி அரேபியாவிலுள்ள மெக்கா, மதீனாவில் ஹஜ் புனித யாத்திரைக்காக இந்தியாவில் உள்ள முஸ்லிம் மக்கள் ஆண்டுதோறும் சென்று வருகின்றனர். கடந்த ஆண்டு தொடங்கிய கொரோனா பரவலால் உலகம் முழுவதிலும் இருந்து வரும் ஹஜ் புனித யாத்திரை பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே கொரோனா பரவல் குறைந்து மீண்டும் மறு உருவத்துடன் பரவ தொடங்கிய நிலையில், இந்த ஆண்டு ஹஜ் புனித யாத்திரை வரும் பயணிகளுக்கு சவுதி அரேபியா அனுமதித்து உள்ளது.

புதிய விதிமுறைகள்

இதனால் இந்தியாவில் இருந்து ஹஜ் புனித யாத்திரை செல்லும் முஸ்லிம்களுக்காக இந்திய ஹஜ் கமிட்டி புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. ஹஜ் கமிட்டி அறிவிப்பின்படி, இந்த ஆண்டு ஹஜ் புனித யாத்திரை செல்ல விரும்புபவர்கள் கொரோனா தடுப்புக்கான இரண்டாவது ஊசியையும் செலுத்தி கொள்வது அவசியமாக்கப்பட்டு உள்ளது. இதை செலுத்தி கொண்டதற்கான மருத்துவ சான்றிதழை அவர்கள் ஹஜ் கமிட்டிக்கு முன்கூட்டியே அனுப்ப வேண்டி இருக்கும். இந்த ஆண்டு அநேகமாக வரும் ஜூலை 19 அல்லது 20-ல் ஹஜ் யாத்திரை அமைய உள்ளது.

இதற்கான வயது வரம்பு 18 முதல் 65 வரையில் ஆகும். சவுதி அரேபியா வருபவர்கள் விமானம் இறங்கியவுடன் 72 மணி நேரம் தனிமைக்கு உட்படுத்தி கொள்ள வேண்டும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 1,008 பேர் பாதிப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 1,008 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2. தினமும் கடைகளுக்கு செல்லாமல் ஒரு வாரத்துக்கு தேவையான பொருட்களை மொத்தமாக வாங்கி வைத்து கொள்ளவும் மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்
தினமும் கடைகளுக்கு செல்லாமல் ஒரு வாரத்துக்கு தேவையான பொருட்களை மொத்தமாக வாங்கி வைத்துக்கொண்டு வீட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
3. பஸ்கள் ஓடவில்லை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது மதியம் 12 மணிக்கு மேல் கடைகள் அடைக்கப்பட்டன
தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக 15 நாட்கள் முழு ஊரடங்கு நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதையொட்டி பகல் 12 மணிக்கு மேல் கடைகள் அடைக்கப்பட்டன. போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
4. அமைச்சர் மதிவேந்தனுக்கு கொரோனா வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார்
தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதனால் அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.
5. கொரோனா நிலைமை சீராகும்வரை காங்கிரஸ் தலைவர் தேர்தலை தள்ளிவைக்க ஒருமனதாக முடிவு
காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை தள்ளிவைக்க காங்கிரஸ் காரிய கமிட்டி ஒருமனதாக முடிவு செய்துள்ளது.

அதிகம் வாசிக்கப்பட்டவை