புதுச்சேரியில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு - துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் அறிவிப்பு


புதுச்சேரியில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு - துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் அறிவிப்பு
x
தினத்தந்தி 19 April 2021 1:42 PM GMT (Updated: 19 April 2021 1:42 PM GMT)

புதுச்சேரியில் நாளை முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் அறிவித்துள்ளார்.

புதுச்சேரி,

இந்தியாவில் கொரோனா 2 வது அலை தன் கோர முகத்தைக்காட்டி வருகிறது. ஒவ்வொரு நாளும் புதிய உச்சம் காண்கிற வகையில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. விழிப்புணர்வு பிரசாரம், தடுப்பூசி திட்டம் என பல உத்திகள் வகுத்து தொற்று பரவலை தடுக்க முயற்சித்தபோதும், எதற்கும் கட்டுப்படாமல் பரவல் அதிகரித்துக்கொண்டே போகிறது. 

இதைபோல புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா வைரஸ் 2-வது பரவல் வேகமாக பரவி வருகிறது. மாநிலத்தில் பரவி வரும் கொரோனா 2-வது அலையில் இருந்து அனைத்து மக்களும் பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இந்நிலையில், புதுச்சேரியில் நாளை முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் அறிவித்துள்ளார். மேலும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை பொதுமக்கள் வெளியே வரக்கூடாது என்று பொதுமக்களிடம் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Next Story