தேசிய செய்திகள்

மே 1ல் இருந்து 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி; அரசு அறிவிப்பு + "||" + Corona vaccine for people over 18 from May 1; Government Notice

மே 1ல் இருந்து 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி; அரசு அறிவிப்பு

மே 1ல் இருந்து 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி; அரசு அறிவிப்பு
வரும் மே 1ந்தேதியில் இருந்து 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்படும் என அரசு அறிவித்து உள்ளது.
புதுடெல்லி,

கொரோனா பாதிப்புகளை தடுக்க இந்தியாவில் அவசரகால தேவைக்காக தடுப்பூசிகளை பயன்படுத்தி கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியது.  இதன்படி, கடந்த ஜனவரி 16ந்தேதி முதல் நாட்டில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

உள்நாட்டில் உற்பத்தியான கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகியவை இதற்கு அனுமதி அளிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.  முன்கள பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் ஆகியோருக்கு முதற்கட்ட அடிப்படையில் தடுப்பூசிகள் போடப்பட்டன.

இதன்பின்னர் கடந்த மார்ச் 1ந்தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.  இதில், 100 வயது கடந்தவர்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ள செய்தியில் வருகிற மே 1ந்தேதியில் இருந்து 18 வயதுக்கு மேற்பட்ட தகுதியுடைய ஒவ்வொருவரும் தடுப்பூசி போட்டு கொள்ளலாம் என அறிவித்து உள்ளது.

இதன்படி தனியார் மருத்துவமனைகளும் தடுப்பூசிகளை கொள்முதல் செய்து வைத்து கொள்ளும்.  தனியார் தடுப்பூசி வினியோகம் செய்வோர் அதற்கான விலையை நிர்ணயம் செய்து கொள்ளலாம்.  இதனால், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று கொரோனா தடுப்பூசிகளை போட்டு கொள்ள முடியும்.

தொடர்புடைய செய்திகள்

1. பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட சிறப்பு முகாம்கள்; தென்காசி கலெக்டர் தகவல்
தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்படும் என்று கலெக்டர் சமீரன் கூறினார்.
2. தடுப்பூசி கொள்முதல் செய்ய உலகளாவிய ஒப்பந்தபுள்ளிகள்: நிறுவனங்களுக்கு ஆந்திர அரசு அழைப்பு
மத்திய அரசு ஒதுக்கியுள்ள தடுப்பூசி போதிய அளவில் இல்லாததால் தடுப்பூசியை வெளிநாடுகளில் இருந்து கொள்முதல் செய்ய ஆந்திர அரசு உலகளாவிய ஒப்பந்தபுள்ளிகள் விட்டுள்ளது.
3. 409 பேருக்கு கொரோனா தடுப்பூசி
409 பேருக்கு நேற்று கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
4. கொரோனா தடுப்பூசி முகாம்
வத்திராயிருப்பில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
5. "கொரோனா தடுப்பூசி மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும்"- பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
கொரோனா தடுப்பூசி மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்,